Sunday, February 26, 2012

மின்னூல்(e-Book Pdf) - விண்டோஸ் ரைட்டர் மூலம் பிளாக்கர் பதிவிட

நண்பர்களே விண்டோஸ் ரைட்டர் மூலம் பிளாக்கர் பதிவிட என்ற தலைப்பில் கீழே உள்ள மூன்று தொடர்பதிவுகளை பதிந்துள்ளேன்.
மேலே உள்ள மூன்று பதிவுகளையும் தொகுத்து ஒரே pdf கோப்பாக(file) மாற்றி உள்ளேன். மூன்று பதிவுகளையும் மொத்தமாக ஒரே pdf கோப்பில் படிக்கலாம். இந்த மின்னூல்(e-Book) pdf கோப்பை கீழே உள்ள சுட்டியை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

Saturday, January 14, 2012

விண்டோஸ் ரைட்டர் மூலம் பிளாக்கர் பதிவிட - பாகம் 3

இந்த பதிவை படிப்பதற்கு முன் இந்த பதிவின் முந்தைய இரு பாகங்களை படிக்காதவர்கள் கீழே உள்ள சுட்டிகளை(URL or Link) கிளிக் செய்து படித்து கொள்க.
  1. விண்டோஸ் ரைட்டர் மூலம் பிளாக்கர் பதிவிட - பாகம் 1
  2. விண்டோஸ் ரைட்டர் மூலம் பிளாக்கர் பதிவிட - பாகம் 2
நாம் பதியும் பதிவுகளில் Read more>> என்ற வசதியை பலரும் பயன்படுத்துவதுண்டு. அதாவது முழுபதிவையும் வலைப்பூவின் முகப்பு(Home) பக்கத்தில் காட்டாமல் பதிவின் ஆரம்ப பகுதி சிலவற்றை காட்டிவிட்டு மீதி பதிவை  Read more>> அல்லது மேலும் படிக்க அல்லது தொடர்ந்து படிக்க   போன்ற சுட்டி ஒன்றை கொடுத்து சுட்டியை கிளிக் செய்தால் படிக்குமாறு காட்டுவோம். எனது வலைப்பூவில் தொடர்ந்து படிக்க(Read more) » என வைத்துள்ளேன்.
Lucky Limat - BrowseAll - Read More Link
Read more>> வசதியை நமது வலைப்பூவில் சேர்ப்பதற்கு பிளாக்கர்(Blogger) தளத்தில் தேவையான இடத்தில் Insert jump break கிளிக் செய்ய வேண்டும் அல்லது <!—more—> என்பதை தேவையான இடத்தில் Html Code ல் இணைக்க வேண்டும்.

Artikel Terkait

0 comments

Post a Comment

Cancel Reply