Sunday, February 26, 2012

விண்டோஸ் ரைட்டர் மூலம் பிளாக்கர் பதிவிட - பாகம் 2

கடைசியாக பதிந்த விண்டோஸ் ரைட்டர் மூலம் பிளாக்கர் பதிவிட - பாகம் 1 என்ற பதிவில் விண்டோஸ் ரைட்டர் பற்றிய அறிமுகத்தையும், எளிதாக ஒரு பதிவை எப்படி பதியலாம் என்பதை பார்த்தோம். விண்டோஸ் ரைட்டரில் உள்ள மேலும் பல வசதிகளை பற்றி இந்த பதிவில் பாப்போம்.
முதல் உங்கள் பதிவில் ஏதாவது சுட்டியை(Url or Hyperlink) இணைப்பது எப்படி என பார்ப்போம். உதாரணமாக மேலே நான் கொடுத்துள்ள போன பதிவின் சுட்டியை எப்படி இணைத்தேன் என பாப்போம்.
முதலில் சுட்டி தர வேண்டிய வார்த்தையை தேர்வு செய்து மேலே டூல் பாரில் உள்ள Hyperlink என்பதை கிளிக் செய்க.
Lucky Limat - BrowseAll - Select Hyperlink Text
Hyperlink கிளிக் செய்தவுடன் கீழே உள்ள திரை வரும். அதில் Web address என்னும் பாக்ஸில் உங்கள் சுட்டியை தருக. மேலும் Open link in new window என்னும் வசதியை தேர்வு செய்தால் சுட்டியானது தனி திரையில் தோன்றும். எல்லாம் கொடுத்தவுடன் OK கொடுத்து விடுக.
Lucky Limat - BrowseAll - Insert Hyperlink
அடுத்து படங்களை எப்படி இணைப்பது என பார்ப்போம். உதாரணமாக மேலே உள்ள படத்தை எப்படி இணைத்தேன் என பார்ப்போம்.
முதலில் Hyperlink அருகில் உள்ள Picture என்பதை கிளிக் செய்தவுடன், கீழே உள்ள வசதிகள் வரும் அதில் From your Computer அதாவது உங்கள் கணிணியில் இருந்து படங்களை இணைக்கலாம் அல்லது From the web இணையத்தில் உள்ள படங்களை சுட்டி(url or link) மூலம் இணைக்கலாம்.
Lucky Limat - BrowseAll - Select Picture Import Option
From your computer கிளிக் செய்தவுடன் வரும் திரையில் தேவையான படத்தை தேர்வு செய்து கொள்க.
Lucky Limat - BrowseAll - Insert Picture
தேர்வு செய்த பின் உங்கள் படம் கீழே உள்ளது உங்கள் ரைட்டரில் இணைக்கப்படும்.
Lucky Limat - BrowseAll - Picture Inserted
இணைக்கப்பட்ட உங்கள் படத்தின் மேல் கிளிக் செய்தால் அல்லது மேலே மெனுவில் தோன்றும் Picture Tools என்பதை கிளிக் செய்தால் உங்கள் படத்தை மாற்றம் செய்ய தேவையான டூல்கள் தோன்றும். அவற்றில் Alignment என்பதை கிளிக் செய்தால் கீழே உள்ள வசதிகள் வரும்.
Lucky Limat - BrowseAll - Picture Alignment
மேலே உள்ள Alignment வசதியில் உங்கள் படத்தை வலப்பக்கமா(Right) , இடப்பக்கமா(Left) அல்லது நடுவிலா(Center) இணைக்க வேண்டும் என்பதை தேர்வு செய்த கொள்ளலாம். நான் Center தேர்வு செய்துள்ளேன். அதன் பின் படத்தின் மேல் கிளிக் செய்து படத்தின் மூலைகளை இழுத்து(drag) செய்து பெரிதாகவோ, சிறிதாகவோ மாற்றி கொள்ளலாம்.
அடுத்து வாட்டர்மார்க்(watermark) இணைப்பதை பற்றி பார்ப்போம். இணைக்கப்பட்ட உங்கள் படத்தின் மேல் கிளிக் செய்தால் அல்லது மேலே மெனுவில் தோன்றும் Picture Tools என்பதை கிளிக் செய்தால் உங்கள் படத்தை மாற்றம் செய்ய தேவையான டூல்கள் தோன்றும்.
Lucky Limat - BrowseAll - select watermark
அவற்றில் Watermark என்பதை கிளிக் செய்தால் கீழே உள்ள திரை வரும். அதில் Watermark text என்பதில் உங்கள் watermark வார்த்தையை கொடுங்கள். உதாரணமாக நான் எனது படங்களுக்கு http://browseall.blogspot.com என கொடுத்துள்ளேன். Position என்பதில் உங்கள் படத்தில் எங்கே watermark வேண்டும் என்பதை தேர்வு செய்து கொள்ளலாம். கீழே உள்ள படத்தில் நான் Centered தேர்வு செய்தலால் நடுவே http://browseall.blogspot.com  என watermark  இருப்பதை காணலாம். Lucky Limat - BrowseAll - Watermark
படம் இணைக்கும் வசதியில் From the web என்ற வசதியை தேர்வு செய்தால்…
Lucky Limat - BrowseAll - from the web
கீழே உள்ள திரை வரும். அதில் உங்கள் படத்தின் சுட்டியை(url or link) Picture web address என்பதில் கொடுத்து படத்தை இணைக்கலாம்.
Lucky Limat - BrowseAll - insert web image
youtube வீடியோ மற்றும் மற்ற வீடியோகளை எப்படி இணைப்பது என அடுத்து பார்ப்போம். Pictureக்கு அடுத்துள்ள Video கிளிக் செய்தால் அதிலும் கீழே உள்ள மூன்று வசதிகள் வரும்.
Lucky Limat - BrowseAll - Video
அதில் From the web என்பதை கிளிக் செய்து உங்கள் வீடியோ சுட்டியை video web address or embed என்ற பாக்ஸில் கொடுத்து வீடியோவை இணைக்கலாம்.
Lucky Limat - BrowseAll - Insert Video
அல்லது From File என்பதை தேர்வு செய்து உங்கள் கணிணியில் உள்ள வீடியோவை தேர்வு செய்தால் , உங்கள் வீடியோ youtube தளத்தில் ஏற்றப்பட்டு பின் இணைக்கப்படும்.
Lucky Limat - BrowseAll - Video from file
From Video service என்பதை தேர்வு செய்தால் youtubeல் நீங்கள் ஏற்கனவே ஏற்றிய வீடியோகளை இணைத்து கொள்ளலாம்.
Lucky Limat - BrowseAll - from video service
Lucky Limat - BrowseAll - from video service 2
விண்டோஸ் ரைட்டரில் உள்ள முக்கியமான வசதிகளை பற்றி இந்த பதிவில் பார்த்தோம். மீதியிருக்கும் சில வசதிகளை பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்

Artikel Terkait

0 comments

Post a Comment

Cancel Reply