Saturday, February 25, 2012

நிலவில் தண்ணீர் இருப்பது உறுதியாகிவிட்டதால்,

இதற்கு முன் எத்தனையோ செயற்கைக்கோள்களை உலக நாடுகள் அனுப்பியும், அவற்றால் சாதிக்க முடியாத இந்த மாபெரும் கண்டுபிடிப்பை இந்தியாவின் சந்திரயான் – 1 சாதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நிலவில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்களுடன் கூடிய படங்களையும் செயலிழப்பதற்கு சில தினங்களுக்கு முன்பு அனுப்பியுள்ளது சந்திரயான்.
கடந்த ஆண்டு அக்டோபர் 22-ம் தேதி சந்திரயான் 1 ஆளில்லாத விண்கலம் நிலவுக்கு அனுப்பப்பட்டது. நிலவுக்கு மனிதனை அனுப்பும் இந்தியாவின் முயற்சியில் முதல்கட்டமாக இந்த விண்கலம் ஏவப்பட்டது.
வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கிய சந்திரயான் பல்வேறு படங்களை எடுத்து அனுப்பியது. இதுவரை 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களை அது அனுப்பியுள்ளது. இதன் மூலம் நிலவின் தரை அமைப்பு, அங்குள்ள தட்ட வெப்ப சூழல் என பல விஷயங்கள் இந்திய விஞ்ஞானிகளுக்குப் பிடிபட்டன.
சந்திரயான் வடிவமைக்கப்பட்ட போது, அமெரிக்காவின் நாசா மையம் தனது ‘பேலோட் போர்ட்ட ஒன்றையும் இதில் பொருத்தி அனுப்பியது. இந்த போர்ட்தான் நிலவில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்களை சேகரித்துள்ளது. எனவே இந்த மாபெரும் சாதனையில் நாசாவுக்கும் பங்கிருப்பதை மறுப்பதற்கில்லை.
எனவே இந்த சாதனை குறித்த விரிவான அறிக்கையின நாசா மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் இன்று அறிவிக்கவிருக்கிறார்கள்.
இதுகுறித்து சந்திரயான்-1 திட்ட இயக்குநர் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை கூறுகையில்,” மிக மிக திருப்தியாக உள்ளது. நிலவில் தண்ணீர்ப் படலம் இருப்பதை சந்திரயானில் இடம் பெற்றிருந்த நாசாவின் எம்3 புகைப்படம் எடுத்துள்ளது.
சந்திரயான்-1 விண்கலத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று தண்ணீர் இருப்பதைக் கண்டறிவது. அது நிறைவேறியுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.
மூன் மேப்பர் மூலம் தெரிய வந்துள்ள இன்னொரு முக்கிய கண்டுபிடிப்பு என்னவென்றால், நிலவில் தொடர்ந்து தண்ணீர் உருவாகிக் கொண்டிருக்கிறது என்பதுதான்…” என்றார்.
சந்திரயான்-1 ஐ வடிவமைத்து அனுப்ப இந்தியாவுக்கு ரூ.400 கோடி செலவானது. ஆனால் குறித்த காலத்துக்கு முன்பாகவே எதிர்பாராதவிதமாக சந்திரயான் செயலிழந்துவிட்டது. எனவே பல்வேறு விமர்சனங்களை இஸ்ரோ சந்தித்தது. ஆனால் சந்திரயான் திட்டம் பெரும் வெற்றி என இந்திய முன்னாள் குடியரசுத் தலைவரும், விஞ்ஞானியுமான டாக்டர் அப்துல் கலாம் தெரிவித்தார்.
இப்போது அதை மெய்ப்பிக்கும் வகையில் சந்திரயானின் சாதனை அமைந்துள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நாசா, “சந்திரயான் மூலம் நிலவு ஆராய்ச்சி மற்றும் ஒட்டுமொத்த விண்வெளி ஆராய்ச்சியே புதிய பரிமாணத்தில் புத்துணர்ச்சி பெற்றுள்ளது என்றால் மிகையல்ல. இது மிகப் பெரிய சாதனை. இதுபற்றி சாதாரணமாக கூறிவிட்டுப் போக முடியாது. இன்று பிற்பகலில் (இந்திய நேரப்படி இரவு 11 மணி) மிகப் பெரிய பத்திரிகையாளர் சந்திப்புக்கு நாசா ஏற்பாடு செய்துள்ளது. அதில் இந்த சாதனை பற்றி விரிவாக பேசப்படும்” என கூறியுள்ளது.
இந்த சாதனை தந்த தெம்பில் சந்திரயான் -2 மற்றும் நிலவுக்கு மனிதனை அனுப்பும் சந்திரயான் -3 திட்டங்களை முன்னெடுக்கிறது இந்தியா.
செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக தனி செயற்கைக்கோள் அனுப்பும் திட்டத்திலும் இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
உயிர்கள் உள்ளனவா?
நிலவில் தண்ணீர் இருப்பது உறுதியாகிவிட்டதால், அங்கு உயிரினங்கள் உள்ளனவா என்பதைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் நாசா இறங்க உள்ளது.

Artikel Terkait

0 comments

Post a Comment

Cancel Reply