Monday, January 16, 2012

விண்டோஸ் ஹேக்கிங் New Folder Hacking

கணினியில் மைக்ரோசாப்டின்
விண்டோஸ் இயங்குதளத்தில் நாம் புதிதாக ஒரு போல்டர் உருவாக்கும் போது அதன்
பெயர் New Folder என்பதாக இருக்கும் நாம் இப்போது பார்க்கபோவது அந்த New
Folder என்பதற்கு பதிலாக நாம் விரும்பும் படியான ஒரு பெயரில் போல்டர்
உருவாகினால் நன்றாய் இருக்கும்தானேஅதுதான் இந்த முயற்சி.
முதலில் நீங்கள் தரவிறக்கி கொள்ளவும்
இதன் உள்ளே ஒரு Resource Hacker மற்றும் Replacer இரண்டும் வைத்துள்ளேன்
கணினியில் உள்ள dll கோப்புகளை திறக்கResource Hacker அவசியம் என்ன
நண்பர்களே தரவிறக்கம் செய்தாகிவிட்டதா? முதலில் Resource Hacker
மென்பொருளை இயக்கி File என்பதில் கிளிக்கி Open என்பதை தெரிவு செய்து
திறக்கும் பாப் அப் விண்டோவில் இதை C:\WINDOWS\system32\shell32.dll
(C:\WINDOWS\system32\shell32.dll உங்கள் இயங்குதளம் D:\யில்
நிறுவப்பட்டிருந்தால் D:\WINDOWS\system32\shell32.dll என்பதாக இருக்கும்)
காப்பி எடுத்து File Name என்பதில் ஒட்டி Open என்பதை கிளிக்கவும்
சந்தேகத்திற்கு படத்தை பார்க்கவும்.
இனி
இடது பக்கம் பாருங்கள் String Tableஎன இருக்கும் அதில் போல்டர் பெயர்
1896 அதை கிளிக்கி டேபிள் 1033 கிளிக்கி வலது பக்கம் பாருங்கள் முதல்
இரண்டு வரிசையில் தான் நாம் மாற்றம்மேற்கொள்ள போகிறோம் நான் New Folder
என்பதை Gsr என மாற்றியிருக்கிறேன் அடுத்ததாக New Shortcut என்பதை Gsr
Shortcut என மாற்றியிருக்கிறேன் நீங்கள் உங்களுக்கு பிடித்த பெயரை
மாற்றிக்கொள்ளுங்கள் இனி அடுத்ததாகCompile Script என்பதை தெரிவு செய்து
ஓக்கே கொடுத்து விடுங்கள் இனி இதை File என்பதில் கிளிக்கி அதில் Save as
என்பதை தெரிவு செய்து shell32.dll என்கிற பெயர் கொடுத்து உங்கள்
டெஸ்க்டாப்பில் சேமித்து விடுங்கள்.
சரி
கணினியின் dll கோப்பில் மாற்றம் செய்தாகிவிட்டது இனி அடுத்து நீங்கள்
முன்னமே தரவிறக்கிய கோப்பில் Replacer என்கிற பெயரில் ஒரு Command பைல்
இருக்கிறதல்லவா அதை வழக்கம் போல இருமுறை கிளிக்கவும் இபோது கமாண்ட் விண்டோ
திறந்திருக்கும் இனி சொல்வதை கொஞ்சம் கவணமாக செய்துவிடுங்கள்
C:\WINDOWS\system32 (C:\WINDOWS\system32 உங்கள் இயங்குதளம் D:\யில்
நிறுவப்பட்டிருந்தால் D:\WINDOWS\system32 என்பதாக இருக்கும்) சென்று
அங்கு இருக்கும் shell32.dll என்கிற பைலை (Drag & Drop) இழுத்து நாம்
திறந்து வைத்திருக்கும் கமாண்டில் இழுத்து விட்டு ஒரு எண்டர் கொடுக்கவும்
அடுத்ததாக நாம் முன்னமே Save as மூலமாக ஒரு shell32.dll என்பதை
டெஸ்க்டாப்பில் சேமித்திருந்தோம் அது நினைவிருக்கிறதா இப்போது அந்த
shell32.dll பைலை (Drag & Drop) கமாண்டிற்குள் இழுத்து விடவும்
இப்போது நீங்கள் இதை மாற்ற விரும்புகிறீர்களா என்பதாக ஒரு செய்தி வரும்
அதில் ஆம் என்பதற்கு Y வேண்டாம் என்பதற்கு N என இருக்கும் நீங்கள் Yஎன
கீபோர்டில் அழுத்தவும் இனி உங்கள் கமாண்டில் சிறிய பேக்கப் நடப்பதை
காணலாம் எல்லாம் முடிந்ததும் உங்கள் கணினியை (Reboot) ரீஸ்டார்ட் செய்து
விடுங்கள் அவ்வளவுதான்.
மீண்டும்
பழைய நிலைக்கு கொண்டுவருவதற்கு இதே செயல்முறையை பின்பற்றவும்

Artikel Terkait

0 comments

Post a Comment

Cancel Reply