Monday, January 16, 2012

Malicious Softwares மற்றும் வைரஸ்கள் பற்றிய தகவல்கள்

நாம் கணனியை பாவிக்கும் போது நாளாந்தம் ஏதாவது ஒரு வைரஸ் எமதுகணனியை தாக்குகின்றது.
எனவே எமக்கு அவ் வைரஸ்கள் பற்றியபோதிய தெளிவின்மையால் அதை நீக்குவது கடினமாக இருக்கும்
எனவே சில வைரஸ்கள் பற்றிய தகவல்கள்
வைரஸ் (Virus)
1.வைரஸ்கள் பல வகைகளாக உபயோகத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தினாலும் இதன் பொதுவான குணமானது ஒரு கணினியில் உள்ள EXEஎனப்படும் விரிவு கொண்ட புரோகிராம்களுடன் தானாகவே சென்று ஒட்டிக் கொள்ளும் திறன் கொண்டது.இது போன்று சேர்ந்து கொண்ட வைரஸ் புரோகிராமானது அந்த EXE விரிவு கொண்ட புரோகிராமை உபயோகப்படுத்தும் போது நாம் எதிர்பாரா வகையில் அந்த புரோகிராமை இயக்க முடியாத வகையில் பல பாதிப்புகளை ஏற்படுத்தும். சில வைரஸ்கள் நமதுபுரோகிராம்களில் உள்ள சில கரக்டர்களை வேறு சில கரக்டர்களாக மாற்றியோ அல்லது நமது புரோகிராம் வகளை காணாமல் செய்தோ பாதிப்புகளை ஏற்படுத்தும். இதுவரை பல்லாயிரக்கணக்கான வைரஸ்கள் உலகில் உபயோகத்தில் இருந்து வந்தாலும் சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த I Love You எனப்படும் வைரஸ் கணினியில் ஏற்படுத்திய பாதிப்பை யாரும் எளிதில் மறந்திருக்க முடியாது.
2. டிராஜன் ஹோர்ஸ் (Trojan Horse)
இது ஒரு புது வகையான வைரஸ் ஆக கருதப்பட்டாலும் இதன் பாதிப்புகள் நாம் எதிர்பாராத வகையில் இருக்கும். ஏனென்றால் இந்த வகை வைரசானது ஒரு கணினி புரோகிராமுடன் தானாகவே சென்று ஒட்டிக் கொண்டாலும் பல நேரங்களில் எதிர்பார்க் காத சில வேலைகளைச் செய்யும்படி அமைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக ஒரு யூசர் தனது புரோகிராமை எடுத்து அதில் சிலமாற்றங்களைச் செய்ய முற்படும்போது அந்தப் புரோகிராமை அழித்து விடும் தன்மை கொண்டது தான் இந்த டிராஜன்ஹோர்ஸ் ஆகும். இது போன்று புரோகிராம்களை அழித்து விடுவதால் யூசர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப் போகும் நிலை உருவாகிறது.
3. வோம் (Worm )
இந்த வகை வைரஸ் ஆனது சற்று வேடிக்கையானதும் கூட. ஏனென்றால் ஒரு புரோகிராமை நாம் கொப்பி செய்யும் போது அதே போன்று அதே பெயரில் மற்றொரு புரோகிராம் ஒன்றும் உருவாகும். இந்த இரண்டு புரோகிராம்களின் அளவும் ஒரே அளவாகவே காட்டும். ஆகையால் நாம் ஏதாவது ஒன்றை அழிக்க நினைத்து புரோகிராமை அழித்து விடுவோம். அதன் பிறகு நம்மிடம் இருக்கும் அந்த மற்றொரு புரோ கிராமை எடுத்து அதில் உள்ள தகவல்களை பார்த்தோமேயானால் ஒன்றுமே இருக்காது. ஒரு புரோகிராம் வரி கூட இல்லாமல் முற்றிலும் அழிக்கப்பட்டிருக்கும்.
பொதுவாக ஓர் அலுவலகத்தில் கணினியை உபயோகிக்கும் ஒருவர் ஒவ்வொரு முறையும் தனது கணினியில் இருந்து Server கணினிக்கு தகவல்களை அனுப்பும் போதும் இது போன்ற வைரஸ்கள் உள்ளதா என்று சோதனையிட வேண்டும்.
அது போன்று சோதனையிடும் போது இதுபோன்ற அபாயகரமான வைரஸ் புரோகிராம்களை அழித்து விட்டு பிறகு தான் அவற்றைக் கணினியில் ப

Artikel Terkait

0 comments

Post a Comment

Cancel Reply