Sunday, February 26, 2012

பபுள் டிவிட் (Bubble Tweet)

பபுள் டிவிட் (Bubble Tweet)


டிவிட்டரில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் யோசித்து புதிய விசயங்களை மக்களுக்கு எடுத்து செல்கின்றனர். அதுவும் டிவிட்டரில் ஏதேனும் புதிய வரவுகள் வந்தால் மக்கள் அதை சிவப்பு கம்பளி விரித்து வரவேற்கின்றனர். அந்த வகையில் வந்த இன்னொரு விஷயம்தான் பபுள் டிவிட். இது கண்டிப்பாக மக்களிடம் இல்லை இல்லை டிவிப்ளிடம் அதிக வரவேற்பு பெற்று வரும் ஒரு அற்புதமான் கண்டுபிடிப்பு. இதன் சிறப்பம்சம் என்ன தெரியுமா? இதுவரை டிவிட்டரில் நாம் டெக்ஸ்ட் (Text) என்று சொல்ல படும் எழுத்து வடிவத்தை மட்டுமே உபயோகித்து வந்தோம். இப்பொது இதற்கு மாற்றாக வீடியோ முறையிலும் டிவிட் செய்ய முடியும் என சொல்லுவதுதான் பபுள் டிவிட். சரி இந்த பபுள் டிவிட் எப்படி இயங்குகிறது என்று பார்போம். முதலில் http://www.bubbletweet.com/ என்ற இணைய முகவரிக்கு செல்லுங்கள். அங்கே உங்களது டிவிட்டர் பெயரை கொடுத்து எந்த விதத்தில் அதாவது புதிதாக உங்கள் வெப் காமில் இருந்து வீடியோவை பதிக்க போகிறிர்களா அல்லது ஏற்கனவே இருக்கும் வீடியோவை பதிக்க போகிறிர்களா என்று சொல்லிவிட்டு யங்கள் வீடியோவை பதியுங்கள். வெப் காம் என்றால் தானாக உங்கள் மடி கணிணியின் வெப் காமை உபயோகித்து 30 நொடிகள் பேசுங்கள். இந்த கட்டத்தை தாண்டியவுடன் உங்களுக்கு அவர்கள் ஒரு லிங்கை தருவார்கள். அந்த லிங்கில் உங்களது வீடியோ இருக்கும். இப்பொது அதை உங்கள் டிவிட்டர் கணக்கில் உங்கள் நண்பர்களுக்கு டிவிட்டுங்க.

Artikel Terkait

0 comments

Post a Comment

Cancel Reply