Monday, January 16, 2012

virus

கணினி பாதுகாப்புத் தொழில் நுட்பத்தில் பயனரின் அனுமதியின்றி தானாகவே பிரதியெடுக்கும் .exe மற்றும் ஏனைய கோப்புக்களைப் பாதிக்கும் ஓரு நிரலாகும். இவை கணினி வலையமைப்பூடாகவும் (இணையம் மற்றும் அக்கக்கணினி வலையமைப்பு) காவிச்செல்லக்கூடிய செமிப்பு ஊடகங்கள் எடுத்துக்காட்டாக பிளாஷ் டிஸ்க் போன்றவற்றாலும் பரவுகின்றது. அநேகமான கணினிகள் இன்று இணையத்துடனும் அகக்கணினி வலையமைப்புடனும் இணைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான கணினிகள் நச்சுநிரல்களைப் பரப்புவதற்கும் உதவுகின்றன. இன்றைய நச்சுநிரல்கள் உலகாளவிய வலையமைப்பு, மின்னஞ்சல் மற்றும் கோப்புக்களைப் பகிரும் வலையமைப்புக்களூடாகவும் பரவுகின்றன. கணினி வைரஸ் ஆனது இயற்கையான நச்சு நிரல் போன்றே செயற்பாட்டில் ஒத்திருக்கும். நச்சுநிரலானது பலவாறு பரப்பப்படும் இவ்வகைச் செயற்பாடானது கெட்டமென்பொருள் en:Malware எனப்படும். பொதுவான பாவனையில் கணினி வைரஸ என்பது கணினிப் புழுக்கள் en:Computer worm, நல்ல நிரல்கள்போல் நடிக்கும் வைரஸ்கள் en:Trojan horse (computing) எல்லாமே வைரஸ் என்றே அழைக்கப் படினும் அவை தொழில் நுட்பத்தில் சற்றே மாறுபாடானவை. இவை கிருமிநிரல்களை ஒவ்வொரு கணினிக்கும் கொண்டு செல்லும் வேலையைச் செய்கின்றன.

இதில் எடுத்துச்செல்லப்படும் கிருமிநிரல்கள் அந்தந்த கணினிகளில் தங்கி அவர் அக்கணினியில் செய்யும் வேலைகளைக் கவனித்துவருகின்றன அவர் எப்போதாவது கடன் அட்டை இலக்கங்களைத் தரும்போது அவற்றைக் குறிப்பெடுத்துக் கொள்கின்றன. சில சமயங்களில் இணைய வங்கியத்தில் பயன்படுத்தும் கடவுச்சீட்டுகளையும் எடுத்துவைத்துக்கொள்கின்றன.

பின்னர் அவைகளத் தனது எஜமானனுக்கு (Owner of that virus) இணையத்தின் வாயிலாக அனுப்பி விடுகின்றன.சில நச்சுநிரல்கள் நிரல்களில் பாதிப்பினை ஏற்படுத்தி கணினிக்குப் பாதிப்பினை ஏற்படுத்துகின்றன.இவற்றில் கோப்புக்களை அழித்தல், கோப்புக்களின் குணாதிசயங்களை மாற்றுதல் (எடுத்துக்காட்டாக சிஸ்டம் கோப்பாகவோ, மறைக்கப்பட்ட கோப்பாகவோ) மாற்றுதல் போன்றவற்றைச் செய்யும்.

இவை கணினியின் நினைவகத்தை உபயோகிப்பதால் பயனர் பாவிக்கும் நிரல்களுடன் குழப்பத்தை உண்டு பண்ணிக் கணினியை நிலைகுலையச் செய்துவிடும். இவ்வாறான தவறான நிரல்களினால் கணினியில் தேவையான தரவுகளிற்கு அழிவுகள் ஏற்படலாம்.


Artikel Terkait

0 comments

Post a Comment

Cancel Reply