Thursday, January 26, 2012

RAM அண்ட் ROM வித்தியாசம் தெரியுமா?


கம்ப்யூட்டரைப்பயன்படுத்துவதற்கு அதன் அனைத்து தொழில் நுட்பச் சொற்களைத் தெரிந்து கொள்வது அவசியமில்லைஎன்றாலும் ஒரு சிலவற்றின் அடிப்படைப்பண்புகளைத் தெரிந்து கொள்வது நாம் கம்ப்யூட்டரைக் கையாள்வதனை எளிதாக்குவதனுடன் பயனுள்ளதாகவும் மாற்றும்அவ்வகையில் கம்ப்யூட்டரில் உள்ளஇருவகையான அடிப்படை மெமரி எனப்படும் நினைவகங்களைத் தெரிந்து கொள்ளலாம்கம்ப்யூட்டர் தன்னிடம் இடும் தகவல்களை 0 மற்றும் 1 என்ற இரு இலக்கங்களின்கூட்டு அமைப்பில்தான் நினைவில் கொள்கிறதுஎனவே தான் இந்த இரண்டையும் பைனரி (இரண்டுடிஜிட் (இலக்கங்கள்என அழைக்கின்றனர்இந்த சொல்லின் சுருக்கமேபிட்இந்த இரு எண்கள் (பைனரி டிஜிட்கள்மொத்தமாக எட்டுமுறை எழுதப்பட்ட கூட்டே ஒரு பைட்எனவே ஒரு பைட் என்பது எட்டு பைனரி டிஜிட் அடங்கிய ஒரு தொகுப்பு.கம்ப்யூட்டருக்கு ஒரு எழுத்து அல்லது எண்ணை எழுதி வைக்க ஒரு பைட் போதும்இப்படியே மொத்த மொத்தமாய் எழுதுகையில் 1024 பைட்கள் ஒரு கிலோ பைட் என்றும்(ஒரு கேபி) 1024 கிலோ பைட்கள் ஒரு மெகா பைட் (எம் பிஎன்றும் 1024 மெகா பைட்கள் ஒரு கிகா பைட் என்றும் 1024 கிகா பைட்கள் ஒரு டெரா பைட் என்றும் அழைக்கப்படுகின்றனஇந்த பெருக்கம் குறித்து ஏற்கனவே இங்கு எழுதப்பட்டதுகம்ப்யூட்டர் பயன்பாட்டுக்கு வந்த புதிதில் ஒரு மெகா பைட் அளவிலான தகவல் தொகுப்பு அல்லதுடிஸ்க்குகள் மிகப் பெரிதாக எண்ணப்பட்டன.

ஆனால் தொழில் நுட்பம் வளர்ந்த இந்த நாளில் கிகாபைட்கள் தூசியாய் எண்ணப்பட்டு டெராபைட் கள் சாதாரணமாய்ப் பேசப் படும் அளவிற்கு வந்துவிட்டனஎன்ன வளர்ச்சிஅடைந்தாலும் இன்னும் தகவல் நினைவகங்கள் (டேட்டா மெமரிஇதே அளவுகளில் தான் பேசப்படுகின்றனகம்ப்யூட்டரில் மெமரி பல நிலைகளில் பல்வேறு பயன் பாடுகளில்உள்ளதுஇவற்றில் RAM என்பது Random Access Memory என்பதன் சுருக்கம் ஆகும்கம்ப்யூட்டரின் ஹார்ட்வேர் உறுப்பாக மதர்போர்டில் பதிந்தோ அல்லது வயர் மூலம்இணைக்கப்பட்டோ கிடைக்கிறதுகம்ப்யூட்டர் சரியாக இயங்கிட சில அடிப்படை புரோகிராம்களை இயக்கவும் சில கட்டளைகளைச் செயல்படுத்தவும் RAM பயன்படுகிறது.இந்த நினைவகம் கம்ப்யூட்டர் மின்சக்தியைப் பெற்ற பின்னரே செயல்படும்நாம் பயன்படுத்தும் புரோகிராம்கள் RAM மெமரியில் தற்காலிகமாக எழுதப்பட்டுஇயக்கப்படுகின்றன.

RAM என்பதனை ஒரு பெரிய விளையாட்டு மைதானமாக எண்ணிக் கொள்ளுங்கள்ஒவ்வொரு புரோகிராமும் ஒரு குறிப் பிட்ட அளவு இடத்தை எடுத்துக் கொண்டு அங்குஇயங்குகின்றனஇந்த இடத்தில் ஒன்று அல்லது குறிப்பிட்ட அளவிலான புரோகிராம்களை எடுத்துக் கொள்ள முடியும்ஏனென்றால் கீஅமெமரியின் அளவு வரையறைசெய்யப்பட்டதே.
 ஒரு புரோகிராமினை நீங்கள் முடித்து மூடுகையில் அந்த புரோகிராம் RAM மெமரியில் இருந்து எடுக்கப்படுகிறதுஅந்த புரோகிராம் இருந்த இடத்தில் வேறு புரோகிராம்வைக்கப்பட்டு பயன்படுத்தப்படலாம்சில வேளைகளில் விண்டோஸ் உட்பட சில ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் புரோகிராம்களை மூடியபின்னரும் மெமரியின் இடத்தைஅதற்கென வைத்திருக்கும்.
 எப்படி இருந்தாலும் மின்சக்தியின் அடிப்படையிலேயே RAM மெமரி இயங்குவதால் மின்சக்தியினை நிறுத்தினால் அனைத்து புரோகிராம்களும் RAM மெமரியிலிருந்துநீக்கப்பட்டு கிளீன் ஸ்லேட் ஆகிவிடும்நீங்கள் அதிகமான எண்ணிக்கையில் புரோகிராம்கள் அல்லது தகவல் களைக் கொண்டு இயக்க விரும்பி னால் உங்கள் கம்ப்யூட்டரில்அதிக RAM மெமரி வேண்டியதிருக்கும்அதிக எண்ணிக்கையில் பஸ்கள் வந்து செல்ல பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்திட பக்கத்து இடத்தை வளைத்துப் போடுவது போலகூடுதலாக சற்று இடத்தை இணைப்பதுதான் அதிக மெமரியைத் தரும்இதனை கூடுதல் ராம் மெமரி ஸ்டிக் இணைத்து மேற்கொள்ளலாம்இது சிறிய செவ்வக வடிவிலானஸ்டிக் வடிவில் கிடைக்கின்றனஇதில் மெமரி மாட்யூல்கள் எனப்படும் காலி இடங்கள் இருக்கும்இவற் றை கம்ப்யூட்டர் மதர் போர்டில் இதற்கென உள்ள இடங்களில்இணைத்து வைக்கலாம்.

இவை இருவகைகளில் தற்போது பிரபலமாய் உள்ளனஅவை:

SIMM எனப்படும் Single Inline Memory Module மற்றும் DIMM எனப்படும் Dual Inline Memory Module ஆகும்முதல் வகை இன்னும் புழக்கத்தில் இருந்தாலும் இரண்டாவது வகையேஅடிப்படை தரத்தைக் கொண்டதாக ஆக்கப்பட்டுள்ளதுஉங்கள் கம்ப்யூட்டரின் மெமரி அதிக அளவில் இருந்தால் தான் நிறைய அளவிலான எண்ணிக்கையில்புரோகிராம்களை இயக்க முடியும்தற்போதைய மல்ட்டி மீடியா (ஆடியோவீடியோபடங்கள் ஆகியனபுரோகிராம்கள் பெரிய அளவில் அமைவதால் அவற்றைக் கையாளஅதிக இடம் தேவையாய் உள்ளதுஇன்றைய நிலையில் ஒரு ஜிபி ராம் மெமரி ஒரு கம்ப்யூட்டர் இயங்க தேவையாய் உள்ளது.

இனி அடுத்ததான மெமரி குறித்து பார்க்கலாம். ROM என்பது Read Only Memory என்பதன் சுருக்கமாகும்மதர் போர்டில் உள்ள சிப்களில் மாற்றமுடியாத கட்டளைகள் அடங்கியபுரோகிராம்களைக் கொண்டுள்ள மெமரி இதுகம்ப்யூட்டர் இயக்கத்தில் உள்ளதோ இல்லையோ இதில் உள்ள புரோகிராம்கள் இயங்குவதற்கு தயாராய் எப்போதும் ரெடியாகஇருக்கும்உங்கள் கம்ப்யூட்டரை இயக்கத் தேவையான சில அடிப்படை புரோகிராம்களை இது கொண்டிருக்கும்இவை கம்ப்யூட்டர் இயக்கத்தின் உயிர்நாடியானஇயக்கத்தைக் கொண்டிருப்பதால் இவை மாற்றப்படக் கூடாதுஅதே போல இதனை மாற்றி வேறு சில புரோகிராம்களை இணைப்பதுவும் கூடாதுஇதனை மாற்றுவதும்அவ்வளவு எளிதான வேலை அல்லவீட்டுக்கு கேஸ் மற்றும் மின்சாரம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் இந்த ROM மெமரியில் உள்ள புரோகிராம்கள்எனவேஇந்த வகை மெமரியே லேசர் பிரிண்டர்கால்குலேட்டர் போன்ற சாதனங்களிலும் சில விஷயங்களை எப்போதும் நினைவில் கொண்டு இயங்க பயன்படுத்தப்படுகின்றன.கம்ப்யூட்டரின் திறன் அதிகப்படுத்தப்படுகிறது என்று சொல்கையில் இந்த இரு நினைவகங்களும் அதில் நிச்சயமாய் சம்பந்தப் படுத்தப்படுகின்றனஉங்கள் கம்ப்யூட்டரின் RAMமெமரியை எவ்வளவு அதிகப்படுத்துகிறீர்களோ அந்த அளவிற்கு உங்கள் கம்ப்யூட்டரின் திறனும் கூடும்.

Artikel Terkait

0 comments

Post a Comment

Cancel Reply