Thursday, January 26, 2012

lavan


நமக்கு தினந்தோறும் குழுக்களிடமிருந்தும் நண்பர்களிடமிருந்தும் ஏராளமான அளவில் மின்னஞ்சல்கள் நம்முடையமின்னஞ்சல் பெட்டியில் மலைபோல வந்து குவிந்திருக்கும்  அவைகளுள் மிகமுக்கியமானதும் உடனடியாக கவணம் செலுத்தகூடியதும் ஆனவை எவையென தேடிபிடிப்பது கடற்கரை மணலில் தொலைந்துபோன குண்டூசியை தேடுவதற்கு ஒப்பான செயலாகும் இவ்வாறான சங்கடமான நிலையில் நமக்கு உதவுவதற்காக முன்னரிமை மின்னஞ்சல்பெட்டி (Priority Inbox)என்ற வசதியை ஜிமெயில் அளிக்கின்றது

இதனை(Priority Inbox) செயலுக்கு கொண்டுவருவதற்கு நம்முடைய ஜிமெயில் மின்னஞ்சல் திரையில் மேலே வலதுபுறம் உள்ள settings என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் get through your mail faster : priority inbox Beta  என்றதிரை படத்திலுள்ளவாறு தோன்றும் அதில் show priority inbox என்ற வானொலி பொத்தானை தெரிவு செய்து கொண்டு save changes என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

 உடன் இந்த வசதி படத்திலுள்ளவாறு நம்முடைய மின்னஞ்சல் பெட்டியிலுள்ள மின்னஞ்சல்கள் அனைத்தையும் திரையில் important ,not important  ஆகிய இரண்டுவகையாக பிரி்த்து   காண்பிக்கின்றது .இவ்வாறு மிகமுக்கியமானவை முக்கியமற்றவை என இயல்பாக பிரிப்பதற்கு பதிலாக நாம்விரும்பியவாறும் வகைபடுத்தமுடியும் அதற்காக இந்த மின்னஞ்சல் பட்டியலின் வலதுபுறம்   என்றவாறு உள்ள  பொத்தான்களில் கூடுதல்குறி  பொத்தானை சொடுக்கி  important  பகுதியிலும் கழி்த்தல் குறி பொத்தானை சொடுக்கி  not important பகுதியிலும் மாற்றியமைத்து வகைபடுத்திகொள்ளமுடியும்

கருத்துத் தெரிவிக்கவும்
மின்னஞ்சலிடன் படங்களை இணைப்பது எவ்வாறு

 ஜூன் 1, 2011 இல் 4:02 பிற்பகல் (மின்னஞ்சல்(e-mail))

இதற்கு இரண்டு வழிகள் உள்ளன.
 1.மின்னஞ்சல்  தயார்செய்யும் திரையில் Attach a file என்ற  பொத்தான் ஒன்று இருக்கும். அதனை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் தோன்றிடும் திரையின் மூலம் நம்முடைய கணினியி லிருந்து  இணைக்க விரும்பும் படத்தை தேடி இம்மின்னஞ்ச லுடன் நம்மால் இணைக்க முடியும்.
 2. மின்னஞ்சலின் இடையில் ஒருசில இடங்களில் புத்தகங்களில் உள்ளது போல படங்களை இணைக்க விரும்பினால்மின்னஞ்சல் பெட்டியின் மேலே வலது புறத்தில் உள்ள settingsஎன்றபொத்தானை  தெரிவுசெய்து சொடுக்குக உடன் தோன்றிடும் திரையில் “Labs” என்ற பகுதிக்குச் செல்க. அங்கு “Inserting images” என்ற பகுதியின் Enable என்ற  தேர்வுசெய்பெட்டியை தெரிவு செய்துகொள்க. உடன் கணினியிலிருக்கும் படங்களை இணைப்பதற்கான குறும்படங்களுடன்கூடிய கருவிபட்டை ஒன்று திரையில் வந்தமர்ந்துவிடும்

 இதன்பின்னர் அதிலுள்ள Insert image என்ற குறும்படத்தை தெரிவுசெய்து  சொடுக்கி கணினியிலிருக்கும் படங்களைில் தேவையானதை மின்னஞ்சலின் இடையே தேவையான இடத்தில் இணைத்து கொள்ளலாம்.இணையத்தில் இருக்கும் படங்கள் எனில்  அதன் URL-முகவரிமட்டும் Display images below” அல்லது “Always display images from …” என்றவாறு தோன்றிடும் அதனை சொடுக்கி தேவையான படங்களை பெறமுடியும் ஆயினும் இம்மின்னஞ்சலில் படங்கள், உரைகள் சேர்த்து மொத்தம்  அம்மின்னஞ்சலின் அனுமதிக்கப் பட்ட நான்கு எம்பி என்ற வரையறையை தாண்டிவிடும்போது படங்களை இணைப்பதில் சிக்கல் எழும் அதனை தவிர்ப்பதற்கதாக அப்படங்களின் கொள்ளவை குறைப்பது நல்லது அதற்கான வழிமுறை

1.பொதுவாக டிஜிடல் படங்களானது 1 .2 மெகா பிக்செல் இருக்கும். ஆனால் வலைதளத்தில் இவை தெரிவதற்கு 80 to 110 KB அளவு இருந்தாலே போதுமானது.
 அதனால் முதலில்  அவைகளினுடைய அளவை குறைப்பதற்கு அவைகளை PAINT என்ற பயன்பாட்டில்  திறந்து கொள்க பின்னர் மேலே கட்டளை பட்டையிலுள்ள IMAGE=>STRECH/SKEW=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து செயற்படுத்துக பின்னர் தோன்றிடும் திரையில் படத்தின் அளவை நாம் விரும்பியவாறு 30 % ஆக குறைத்துக் கொள்க. பின்னர்சிறிதாகும் படத்தை  மேலே கட்டளை பட்டையிலுள்ள save image as என்றகட்டளையை செயற்படுத்தி வேறொரு பெயரில் இந்த படத்தைசேமித்துக் கொள்க.

2.இவ்வாறு Paint-பயன்பாட்டில் படங்களை திறந்து கோப்புகளின் கொள்ளளவை குறைப்பதை விட எளிய வழியாகMicrosoft Office Picture Manager-பயன்பாட்டில் படத்தை திறந்து கொள்க.

மேலே கட்டளை பட்டையிலுள்ள Picture menu=> compress pictures=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக பின்னர் எந்தத் தேவைக்காக இக்கோப்பின் அளவை சுருக்க விழைகின்றோம் என்பதற்கான வாய்ப்புகள் வலது பக்கத் திரையில் தோன்றும். அதில் தேவையான வாய்ப்பை மட்டும் தெரிவுசெய்த பின் அதே பெயரிலும்  அல்லது File => Save As=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தி வேறொருபெயரிலும் சேமித்துக்கொள்ளலாம்..


 3. பிகாசா வலைதளத்தில் நம்முடைய  படங்களைப் பதிவேற்ற ம் செய்துவிட்டு அதனை இங்கேசுட்டி மூலம் பகிர்ந்து கொள்ளலாம்.

கருத்துத் தெரிவிக்கவும்
மின்னஞ்சல்களின் உள்ளடக்கங்களின்குறியீடுகளைநீக்கம் செய்தல்

 மே 20, 2011 இல் 4:02 பிற்பகல் (மின்னஞ்சல்(e-mail), computer katturaikal)

நமக்கு மற்றவர்களிடமிடருந்து பரிந்துரைத்து வரும் மின்னஞ்சல்களின் உள்ளடக்கங்களில்  ஒவ்வொரு வரியிலும் > > என்பன போன்ற குறியீடுகள் காட்சியளித்து நம்மை எரிச்சலுறச்செய்கின்றன இதனை  தவிர்க்கமுடியுமா என்றால் ஆம் பின்வரும் வழிமுறைகளை பின்னபற்றினால் முடியும்

முதலில் மின்னஞ்சலில் உள்ள இவ்வாறான உள்ளடக்கத்தை நகலெடுத்து எம்எஸ் நோட்பேடு அல்லது வேர்டில் ஒட்டி கொள்க பின்னர் Ctrl + F  என்றவாறு விசைகளை சேர்த்து அழுத்துக உடன் find & Replace என்ற உரையாடல் பெட்டியொன்று திரையில்  தோன்றும் அதில்  search for  என்ற பெட்டியில் இந்த > > குறியீட்டை உள்ளீடு செய்துகொள்க பின்னர் Replace withஎன்ற பெட்டியில் காலியாக விட்டிடுக அதன்பின்னர்  Replace All  என்ற பொத்தானை சொடுக்குக உடன் அனைத்து > > குறியீடுகளும் நீக்கம் செய்யப்பட்டுவிடும்  இப்போது மின்னஞ்சலின் உரை படிப்பதற்கு நன்றாக இருக்கும்

> >
 > >


கருத்துத் தெரிவிக்கவும்
மின்னஞ்சல் சொல்லும் ரகசியங்கள்

 April 30, 2011 இல் 2:13 பிற்பகல் (மின்னஞ்சல்(e-mail), computer katturaikal)

1990-ல் சண்டிகாரைச் சேர்ந்த சபீர் பாட்டியா என்ற சாதாரண மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த  மின்னஞ்சல் ஆனது. இன்றைக்கு நம்முடைய தினசரி காலைக்கடன்களில்  ஒன்றாகிவிட்டது .இது தற்போது நமக்கு அஞ்சலகங்களின் சேவையே தேவையில்லாததாக்கிவிட்டது இதில். அனுப்புநர், பெறுநர்  தகவல் போன்றவை மட்டுமேயுள்ளது என்று  தவறாக எண்ணிவிடவேண்டாம்.

ஒவ்வொரு மின்னஞ்சலிலும் அத்தகவலின் நதிமூலம், ரிஷிமூலம் ஆகிய அனைத்து தகவல்களும் சேர்த்தே அனுப்பி வைக்கப்படுகிறது, ஆயினும் பொதுப்பயன்பாட்டுக்கு அவை அவசியமல்லாததால் நம் பார்வைக்கு இவை தென்படாது. அதனால் இணைய மென்பொருள் நிரல்களை (scripts) எழுதுவது குறித்த அடிப்படை அறிவு ஒருவருக்கு இருந்தால் போதும், ஏதேனுமொரு மின்னஞ்சல் முகவரிக்கு அவர்களின் வலைபதிவை அல்லது அவர்களுடைய செயல்களை  பாராட்டி ஆனந்த விகடன், குமுதம் அல்லது ஏதேனுமொரு பிரபலம் ஆகியோர் அவருக்கு மின்னஞ்சல் அனுப்புவதை போன்று  மின்னஞ்சலை அனுப்புவது மிகமிகச் சுலபம் ஆன செயலாகும்.

நம்ப முடியாத அல்லது சர்ச்சைக்குரிய செய்திகளை மின்னஞ்சலை ஆதாரமாகக் கொண்டு ஊர்ஜிதப்படுத்தும் சூழ்நிலைகளில் முறையாக ஆய்வு செய்யாமல் திரைக்காட்சி (screenshot) அல்லது வெறும் மின்னஞ்சல்களைப் படித்து முடிவுக்கு வராமல் இருப்பது மிக்க நன்று. மிக அதிமுக்கிய தகவல்களை மின்னஞ்சல் மூலம் தெரியப்பெற்றால் அதையும் சரிபார்த்து உறுதிப்படுத்தி கொள்வது மிகவும் நன்று

ஏதேனுமொரு சமயத்தில் நமக்கு ஆப்பிரிக்க, ஆசிய, ஐரோப்பிய, வடஅமெரிக்க, தென் அமெரிக்க, ஆஸ்திரேலிய  அண்டார்டிக்க கண்டங்களிலிருந்து    அதிருஷ்ட தேவதை  வந்து  பொற்காசுகளை அள்ளிவழங்க விருப்பதாகவும் அதற்காக கொஞ்சமாக பணம் அனுப்ப சொல்லியும் வரும் மோசடி மின்னஞ்சல்கள் நாம் அறிந்த செய்தியாகும் இதுமிகபழமையான செய்தியும் கூட. இம்மாதிரி மின்னஞ்சல்களைக் கூர்ந்து நோக்கினால் சமயத்தில் hotmail  yahoo ஆகியவற்றின் அதிகாரப்பூர்வமான மின்னஞ்சல் முகவரிகளில் இருந்து கூட உங்களுக்கு லாட்டரி அடிச்சிருக்கு  உடனே அணுகவும் என்று கூறியிருப்பார்கள். இதில் அனுப்புநர் முகவரி மிகவும் நம்பத்தகுந்தது போல : admin@yahoo.com , customerservice@hotmail.com. என்றவாறு இருக்கும்

 சில சமயங்களில் பிரபலங்களுக்கு  வேட்டு வைக்கப் போவதாக  ஒருசில சில்மிஷமான மின்னஞ்சல்களை  அனுப்பும் சம்பவங்களைப் பற்றியும் அறிந்திருப்பீர்கள். உடன் இதற்காக  இணையக் குற்றவியல் துறையினர் குற்றவாளியைத் தேடி பட்டிவீரன் பட்டியில் வலைவீசிக் தேடிக்கொண்டிருப்பார்கள். இது எவ்வாறு சாத்தியமாகும்

பொதுவாக மின்னஞ்சல் நேரடியாக ஒருவரிடமிருந்து வரலாம் அல்லது சாமி உங்களை தண்டித்துவிடும் அதனால் இந்த மின்னஞ்சலை குறைந்தது 7 பேருக்காவது அனுப்புக என்றோ அல்லது முன்பகிர்வு மின்னஞ்சலாகவோ (forwarded emails) இருக்கலாம். ஒரு மின்னஞ்சல் எவ்வாறு இருந்தாலும் அதனுடைய மூலத்தை (origin) மிக எளிதாக நம்மால் கண்டுபிடிக்கமுடியும்,

ஒருமின்னஞ்சலில் உள்ள தலைப்பகுதி (header)யில் அம்மின்னஞ்சல் ஓவ்வொரு முறையும் ஒரு முகவரியிலிருந்து மற்றொரு முகவரிக்கு பயனிக்கும் போது அதனுடைய அனுப்புநரின் வலை யிணைப்பு முகவர் எண் (I.P Address), உபயோகப்படுத்திய மின்னஞ்சலின் செர்வர், செர்வரில் அந்த மின்னஞ்சலுக்கான பதிவு எண், தேதி, நேரம், நாள், ஆகிய அனைத்து விவரங்களும்  பதிவாகும். இது நாம் பயன்படுத்தும் மின்னஞ்சல் சேவைக்கேற்ப சிறிது மாறுபடும்.


இதில் உள்ள தலைப்பகுதியில் Received என்ற பகுதி மீண்டும் மீண்டும் வருவதைக்  காணலாம். இந்த Received என்று தலைப்பிட்ட பகுதிகள் தான் மின்னஞ்சலின் மூலத்தைக் கண்டுபிடிக்க நமக்கு உதவப் போகின்றன. முதலில் நாம் அனுப்பும் எந்தவொரு  மின்னஞ்சலும் அதுசேர வேண்டிய இடத்தைப் பொருத்து சில/பல மின்னஞ்சல் செர்வர்களில் பயனித்து இறுதியாகவே பெறுநரை சென்றடை கின்றது (trace route). இது ஓவ்வொரு முறையும் இடம் விட்டு இடம் நகரும் போதும் ஒவ்வொரு Received தகவல் அம்மின்னஞ்சலின் தலைப்பகுதியில் சேர்க்கப்படும். இந்த trace route குறித்து கீழ்காணும் முறையில் நாமே மிக எளிதாக பரிசோதித்துப் பார்க்கலாம்.


Start => Run=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் தோன்றிடும் திரையில் cmd என்று உள்ளீடு செய்க. உடன் command prompt window என்ற கருப்புவெள்ளை திரைதோன்றும். அதில் tracert “IP ADDRESS” அல்லது tracert “DOMAIN NAME” என்று உள்ளீடு செய்து உள்ளீட்டுEnter பொத்தானை அழுத்துக உடன் வரிசையாக  இணைய இணைப்பின் மூலம் நம்முடைய தகவல் பறிமாற்றமானது  கொடுக்கப்பட்ட வலையிணைப்பு முகவர் எண்ணுக்கோ அல்லது வலைத்தளத்திற்கோ எப்படியெல்லாம் பயனித்தது, என்று இது பயனித்த இடங்களின் வலையிணைப்பு முகவர் எண் ஆகிய அனைத்தையும் திரையில் காண்பிக்கும். நாம் ஒரு முகவரிக்கு அனுப்பும் மின்னஞ்சலும் இம்முறையிலேயே  மின்னஞ்சல் செர்வருக்கு சென்று அங்கிருந்து பெறுநரின் மின்னஞ்சல் செர்வருக்கு சென்று அதன் பின் பெறுபவரின் மின்னஞ்சல் பெட்டிக்குச் சென்றடைகின்றது..

. பொதுவாக ஒரு மின்னஞ்சலின் தலைப்பகுதியில் சேர்க்கப்படும் Received தகவல்களானது கீழிருந்து மேலாகப் பதிவு செய்யும் முறையை பின்பற்றப் படுகிறது. அதாவது  ஒரு மின்னஞ்சல் மூன்று நபர்களைத் தாண்டி நம்மிடம் வந்தடைகிறது என்று வைத்துக் கொண்டால்  அந்த மின்னஞ்சல் முதன் முதலில் யாரிடமிருந்து புறப்பட்டது என்பதை அறிய கடைசியாக இருக்கும் Received தகவலைச் பரிசோதிக்க வேண்டும் அதில் அனுப்புநரின் வலையிணைப்பு முகவர் எண் இருக்கும், அதனை கொண்டு அந்த எண்ணுக்கான நாட்டினையோ, ஊரையோ மிக எளிதாக அறிந்து கொள்ளலாம்.

வலையிணைப்பு எண்ணைக் கொடுத்தால் அதன் இடத்தைக் காட்டிக் கொடுக்கும் : http://www.melissadata.com/Lookups/iplocation.asp என்பன போன்ற இலவச வலைத்தளங்கள் இணையத்தில் ஏராளமாக இருக்கின்றன. இவற்றை ஏதேனுமொரு இணைய உலாவிமூலம் தேவைக்கேற்ப தேடிபிடித்து தேர்வு செய்து கொள்க.

நாம் பயன்படுத்தும் மின்னஞ்சல் சேவை (yahoo/hotmail/gmail) அல்லது மின்னஞ்சல் பயனாளர் மென்பொருட்கள் (email clients: outlook/outlook express/thunderbird) ஆகியவை அதனதன் தன்மைகேற்ப மாறுபடும்.

யாஹூ மின்னஞ்சல்: இதன் மேல் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குக உடன் தோன்றிடும் பட்டியில் view full headers என்பதை தெரிவுசெய்து சொடுக்குக.

ஹாட்மெயில்: இம்மின்னஞ்சலின் மேல்இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குக உடன் தோன்றிடும் பட்டியில் view message source என்பதை தெரிவுசெய்து சொடுக்குக.

ஜிமெயில்: இம்மின்னஞ்சலைத் திறந்த பின் Reply என்ற பொத்தானில் கீழ்நோக்கிய அம்புக்குறிபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் தோன்றிடும் பட்டியில் show original என்பதனைத் தேர்வு செய்க.

அவுட்லுக்: இதன் மேல்பகுதியில்  இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குக உடன் தோன்றிடும் பட்டியில் options என்பதை தெரிவுசெய்து  சொடுக்குக உடன் message options window என்பது திரையில் தோன்றும் அதில internet headers என்ற பகுதியில் தலைப்பகுதியினைக் காணலாம்.

அவுட்லுக் எக்ஸ்பிரஸ்: இதன் மேல்பகுதியில்  இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குக உடன் தோன்றிடும் பட்டியில் properties என்பதை தெரிவுசெய்து சொடுக்குக உடன் திரையில் தோன்றும் படிவத்தில் details என்ற பகுதியைத் தேர்வு செய்க.

தண்டர்போர்ட்: இதன் மேல்பகுதியிலிருக்கும்பட்டியில் View => message source=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக

இவ்வாறு செயற்படுத்தியவுடன் காணும் தலைப்பு பகுதியில் நமக்குத் தேவையான Received என்று குறிப்பிடப்பட்ட பகுதிகள் மட்டுமே. இந்த Received பகுதிகள் அனுப்புநர், அனுப்புநரின் வலையிணைப்பு முகவர் எண் (ip address), பெறுநர்  மின்னஞ்சல் செர்வர்களின் பெயர்கள், செர்வர்களின் குறியீட்டு எண்கள் ஆகியத் தகவல்களைக் கொண்டிருக்கும்.

பல நபர்களைக் கடந்து ஒரு மின்னஞ்சல் உங்களுக்கு வருகின்றதெனில் இந்த received பகுதிகளைக் கீழிருந்து மேலாக ஆய்வு செய்தால் அதில் ஒரு ஒழுங்கு இருக்கும். அதாவது கீழே இருக்கும் received பகுதியின் பெறுநர் அதன் மேலே received பகுதியின் அனுப்புநராக இருப்பார்,. அவ்வாறு இல்லாமல் இருந்தால் மின்னஞ்சலில் விவகாரமான விஷயங்கள் இருக்கலாம், காரணம் தேர்ந்த சில்மிஷ மின்னஞ்சல் அனுப்பும் கில்லாடிகள் வலை நிரல்கள் மூலம் இந்த மின்னஞ்சலின் தலைப்பகுதியிலும் கைவைத்து குழப்பி விடுவார்கள்.

நன்கு  வாரியிருக்கும் தலைமுடியை கலைத்து விடுவது போல மேலும் சில received பகுதிகளை நிரல்கள் மூலம் ஆங்காங்கே மானாவாரியாக தலைப்பகுதியில் விதைப்பார்கள். அவற்றை மண்டை காய்ந்தாலும் கவலைப்படாமல் களையெடுப்பது ஆய்வு செய்யும் நிபுணர்களின் வேலையாகும்.

மேலே சொன்னபடி அனைத்து received பகுதிகளும் ஒன்றுக்கொன்று தொடர்ச்சியாக இருக்க வேண்டும்(கீழே இருக்கும் received பகுதியின் பெறுநர் அதன் மேலே received பகுதியின் அனுப்புநராக இருப்பார்). அவ்வாறு இல்லாத received பகுதிகளை நீக்கிக் கொண்டே வந்தால் ஒழுங்கு படுத்தி விடலாம். அவ்வாறு ஒழுங்கு படுத்தி விட்டு பார்க்கும் போது கடைசி received பகுதியில் இருக்கும் வலையிணைப்பு முகவர் எண் (“[ ]” என்ற அடைப்புக் குறிக்குள் வழங்கப்பட்டிருக்கும்) இதுதான் நமக்குத் தேவையான தகவல்.ஆகும்

 அது போக மின்னஞ்சல் சேவையினை வழங்கும் நிறுவனங்கள் தங்களுக்கென சில தலைப்பு பகுதிக் கட்டமைப்புகளைப் தனித்தன்மையுடன் வைத்துள்ளன. ஹாட்மெயில் சேவையில் அனுப்பப்படும் மின்னஞ்சல்களின் தலைப்பு பகுதியில் வழக்கமான received பகுதிகளோடு சேர்த்து X-Origninating-IP என்ற ஒரு பகுதி கூடுதலாக இருக்கும். அதில்  முதன் முதலில்  அந்த மின்னஞ்சலை அனுப்பியவரின் வலையிணைப்பு முகவர் எண் இருக்கும். இதனால் நமக்கு ஆய்வு செய்யும் வேலை மிச்சம்.ஆகும்

யாஹூ வழக்கம் போல நாம் விவரித்த முறையிலேயே தங்கள் மின்னஞ்சல்களின் தலைப்பு பகுதியினை கட்டமைத்திருக்கிறார்கள். மேலிருந்து கீழாக received பகுதிகளை ஆய்வு செய்தால் கடைசியாக இருக்கும் பகுதியில் முதன் முதலில்  அந்த மின்னஞ்சலை அனுப்பியவரின் வலையிணைப்பு முகவர் எண் இருக்கும்.

ஜிமெயில் தமது மின்னஞ்சல் சேவையின் போது உலாவி மூலம் மின்னஞ்சல் அனுப்பினால் அனுப்புநரின் வலையிணைப்பு முகவர் எண்களை பதுக்கி விட்டு, தம்முடைய மின்னஞ்சல் செர்வரின் தகவல்களை மட்டுமே அளிக்கின்றது. அனுப்புநரின் வலையிணைப்பு முகவர் எண் தேவை என்றால் கூகுளிடம் ஒரு வாரமோ அல்லது பத்து நாட்களோ கெஞ்சி கூத்தாடி சல்லடைபோட்டு தேடினால் மட்டுமே கிடைக்கப்பெறும். கூகுள் செய்யும் இணையச் சேட்டைகளில் இதுவும் ஒன்று. உலாவி அல்லாமல் மின்னஞ்சல் பயனாளர் மென்பொருட்களான outlook  போன்றவைகளை பயன்படுத்தி அனுப்பினால் தலைப்பகுதியில் அனுப்புநரின் முகவர் எண் கிடைக்கப் பெறும்.

அடுத்து நாம் http://www.melissadata.com/Lookups/iplocation.asp  போன்ற வலைத்தளங்களுக்கு சென்று கண்டுபிடித்த வலையிணைப்பு முகவர் எண்ணை உள்ளிட்டால் அதன் இருப்பிடத்தை அறியலாம்.

இறுதியாக ஒரு செய்தி இம்மின்னஞ்சலானது இரண்டு விதமாக அனுப்பப்படலாம். ஒன்று நேரடியாக அனுப்புநரால் அனுப்பப்படுவது. இரண்டாவது தானியங்கி நிரல்களால் வெப் செர்வர்களின் மூலம் அனுப்பப்படுவது. முதல் வகை நாம் சாதரணமாக அனுப்பும் முறையாகும். வலைப்பதிவுத் திரட்டிகளில் இருந்து பெறும் மின்னஞ்சல்கள் இரண்டாவது வகையை சார்ந்தது ஆகும்  இவை அனேகமாக நிரல்கள் மூலம் வெப் சர்வரில் இருந்து அனுப்பப்படுபவையாகும். அவற்றின் தலைப்பு பகுதியினை ஆய்வு செய்தால் கிடைக்கும் வலையிணைப்பு முகவர் எண், அவர்களின் வெப் சர்வருக்கு உரியதாக இருக்கும். அதன் இடத்தை கண்டுபிடித்தால் வெப் சர்வர் எங்கிருந்து செயல்படுகிறது என்பதை அறியலாம்.

இவ்வாறு ஆய்வு செய்வதன் மூலம் தான் junk, spam மின்னஞ்சல்கள் கட்டுப்படுத்தப் படுகின்றன. நம்முடைய மின்னஞ்சல்களில் ஒன்றை junk அல்லது spam என்று நாம் வகைப்படுத்தினால் பின்னணியில் செயல்படும் நிரல்கள் அவற்றின் தலைப்பகுதியை ஆய்வு செய்து அதன் மூலத்தின் வலையிணைப்பு முகவர் எண்ணைக் கண்டுபிடித்து குறித்து வைத்து கொள்ளும், அதன் பின்னர் எப்பொழுது அந்த வலையிணைப்பு முகவர் எண்ணிலிருந்து நமக்கு மின்னஞ்சல் வந்தாலும் அவை spam அல்லது junk என்று வகைப்படுத்தப்படும்.

பி.கு: இதன் மூலம் ஒருவருக்கு நாம் மின்னஞ்சல் அனுப்புப் போது நாம் வெறும் தகவல் மட்டும் அனுப்புவதில்லை, நமக்குத் தெரியாமல் நம்மைப் பற்றிய பல்வேறு குறிப்புகளையும் சேர்த்தே அனுப்புகின்றோம் என்பதையும் நினைவில் கொள்க, சந்தேகத்துக்குரிய மின்னஞ்சல்களை இவ்வாறு நாமே ஆய்வு செய்து தெளிவடைந்து மின்னஞ்சல் மோசடிகள், சில்மிஷங்களிலிருந்து அவரவர்களை தற்காத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தபடுகிறது

3 மறுமொழிகள்
மின்னஞ்சல்களுக்கு இரண்டடுக்கு பாதுகாப்பு வளையத்தை அமைக்கலாம்

 April 4, 2011 இல் 8:02 மு.பகல் (மின்னஞ்சல்(e-mail), computer katturaikal)

தற்போதைய நிலையில் நாம் உள்நுழைவு செய்வதற்கு பயன்படுத்தும் நம்முடைய கடவுச்சொற்களை யூகித்து அல்லது திருடி மிக எளிதாக நம்முடைய மின்னஞ்சல் பெட்டிக்குள்  சென்று நமக்கு வந்துள்ள மின்னஞ்சல்களை படிக்கமுடியும்  இதனை தவிர்க்க கூகிள் கணக்கில் இரண்டடுக்கு பாதுகாப்பு  அமைத்திடும் வசதி கொடுக்க பட்டுள்ளது இதனால் நம்முடைய மின்னஞ்சல் பெட்டியை திறப்பதற்கு சிறிது காலதாமதம் ஆகும்  இதனை எவ்வாறு செயல்படுத்துவதுஎன இப்போது காண்போம்

முதலில் நம்முடைய  கணக்கிருக்கும் பக்கத்திற்கு செல்க.அந்த திரையில்Personal  Settings என்பதன்கீழ் securities என்பதற்கருகில் உள்ள Using 2-step verification என்ற இணைப்பை தெரிவுசெய்து சொடுக்குக.

படம்

பின்னர்  விரியும் திரையில்  நம்முடைய ஜிமெயிலிற்கான பயனாளரின் பெயர், கடவுச்சொற்களை உள்ளீடு செய்து உள்ளீட்டு விசையை அழுத்துக உடன் 2-step verification  என்ற திரை தோன்றும் அதில் Set up 2-step verification என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

 படம்

அதன்பின்னர் தோன்றிடும் திரையில் அடுத்து உள்ளீடு செய்ய வேண்டிய குறியீடுகளை பெறும் பின்வரும் மூன்று வழிகளிலொன்றை தெரிவுசெய்யவேண்டும்

1ஆண்டிராய்டு ,பிளாக்பெர்ரி, ஐஃபோன்  ஆகியவற்றை பயன்படுத்துவதற்கான பயன்பாட்டை நிறுவியிருந்தால் தானாகவே அவற்றை இயக்கி குறியீடுகளை அளித்து விடும்  அல்லது

2.  ஏதேனுமொரு செல்லிடத்துபேசி எண்ணை அளித்தால்  அதற்கு இந்த குறியீடுகளை குறுஞ்செய்திவழியாக அனுப்பிவைக்கும் அல்லது
படம்-3

3. ஏதேனும் ஒரு தொலைபேசி எண்ணை அளித்தால் அதற்கு ஒலிவழியாக  இந்த குறியீடுகளை அனுப்பி வைக்கும்  இவற்றுள் இரண்டாவது அல்லது மூன்றாவது வாய்ப்பினை தெரிவுசெய்வதற்கு Other – Use another phone என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக
படம்

பின்னர் தோன்றிடும் திரையில் தேவையான விரங்களை உள்ளீடுசெய்துஇவை சரியாக செயல்படுகின்றதாவென சரிபார்ப்பதற்கு . Send Code என்ற  பொத்தானை சொடுக்குக அதன்பின்னர் நம்மால் பெறப்பட்ட மாதிரி குறியீடுகளை உள்ளீடுசெய்து Verify என்ற  பொத்தானை சொடுக்குக சரியாக இருந்தால் Next என்ற பொத்தானை சொடுக்குக.

படம்

பின்னர் இந்த கணக்கில் இதற்காக அமைவு செய்திருந்த செல்லிடத்துபேசி தொலைந்து போய்விட்டால் மாற்று ஏற்பாடாக இந்த குறீயீடுகளை  காப்புநகல் செய்து கொள்வது நல்லது.அதற்காக அடுத்து தோன்றிடும் திரையில் Yes, i have a copy of my backup verification codes என்ற தேர்வுசெய்பெட்டியை தெரிவுசெய்து Next என்ற பொத்தானை சொடுக்குக
படம்

தேவையெனில் மேலுமொரு செல்லிடத்து பேசிஎண்ணை அமைவுசெய்து  Turn on 2-step verification என்ற பொத்தானை சொடுக்குக..
படம்

இவ்வாறு அமைவுசெய்த பிறகு ஜிமெயில் கணக்கிற்குள் உள்புகுவதற்காக பயனாளரின் பெயரையும் கடவுச்சொற்களையும் உள்ளீடுசெய்து login என்ற பொத்தானை சொடுக்கி உள்நுழைவுசெய்க.

உடன் நம்முடைய மின்னஞ்சல் பெட்டிக்குள் போகாமல் Two step Verification என்ற  திரைக்கு நம்மை அழைத்துசெல்லும் அங்கு Enter code என்ற உரைபெட்டியில் நம்மால் பெறப்பட்ட குறியீடுகளை உள்ளீடு செய்து  verifyஎன்ற பொத்தானை சொடுக்குக
படம்

எச்சரிக்கை தேவையானால் மட்டும் Remember verification for this computer என்பதன் தேர்வுசெய்பெட்டியை தெரிவுசெய்க

கருத்துத் தெரிவிக்கவும்
மின்னஞ்சல் பெட்டியை திறந்து பார்க்காமலேயே அதனுடைய உள்ளடகத்தை அறிந்து கொள்வது எவ்வாறு

 April 4, 2011 இல் 6:29 மு.பகல் (மின்னஞ்சல்(e-mail), computer katturaikal)

நம்முடைய மின்னஞ்சல் பெட்டியில் உள்ள ஏராளமான மின்னஞ்சல்களின் குவியலிலிருந்து ஒவ்வொன்றையும் திறந்து அதனுள் என்ன செய்தி உள்ளது என அறிந்து தேவையெனில் வைத்துகொள்வது தேவையில்லை யெனில் அவைகளை அழித்துவிடுவது என்ற பணி மிகஅதிக காலவிரையம் கொண்டதும் சலிப்பான செயலுமாகும் அதற்குபதிவாக அவைகளை திறந்து பார்க்காமலேயே  அதனுடைய உள்ளடகத்தை அறிந்து கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் என நம்மில் பலருடைய விருப்பமாகும் இதற்காக நம்முடைய ஜிமெயில் கணக்கிற்குள் செல்க. அங்கு மேலேவலதுபுறமூலையிலிருக்கும் Settings என்பதை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர்தோன்றிடும்திரையில்  Labs என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. அதன்பின்னர் விரியும்  Labs என்ற தாவியின் திரையில் Sneak Peek என்பதில் உள்ள Enable என்ற வானெலிபொத்தானை தெரிவுசெய்து  கொண்டு Save Changes என்ற பொத்தானை  சொடுக்கி நாம் நம்முடைய ஜிமெயில் கணக்கின் அமைவில் செய்த மாற்றத்தை சேமித்துகொள்க இப்போதுநம்முடைய ஜிமெயிலின் மின்னஞ்சல் பெட்டியில் உள்ள ஏராளமான மின்னஞ்சல்களின் குவியலிலிருந்து  தேவையானவற்றின்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை சொடுக்குக பின்னர் தோன்றிடும் பட்டியலிருந்து  தேவையான கட்டளையை செயற்படுத்தி மின்னஞ்சலின் உள்ளடகத்தை முன்காட்சியாக பார்வையிட்டு  தேவையெனில் வைத்துகொள்வது தேவையில்லை யெனில் அவைகளை அழித்துவிடுவது என்ற பணியை செய்க

கருத்துத் தெரிவிக்கவும்
அவுட்லுக்கின் புதியவசதி

 மார்ச் 27, 2011 இல் 12:29 பிற்பகல் (மின்னஞ்சல்(e-mail), computer katturaikal)

அவுட்லுக்கானது  கைவசமுள்ள நண்பர்களின் முகவரி பட்டியலிலுள்ள ஒவ்வோருவருக்கும் ஓட்டெடுப்பிற்கான வினாவை  அனுப்பி அவர்களிடமிருந்து பதிலை பெற்று அதனை ஒருஅட்டவணையாக உருவாக்கி கையாளும் திறன்வாய்ந்ததாகும்.அதுமட்டுமன்று ஒரு நிறுவனம் தம்முடைய ஊழியர்கள் அனைவருக்கும் அவர்களுடைய தேவைகள் விருப்பங்கள் போன்ற அனைத்தையும் இந்த  அவுட்லுக்கை கையாண்டு தம்முடைய ஊழியர்களின் தேவையை ஒருநிறுவனத்தாரால் நிறைவு செய்ய முடியும்

அவுட்லுக் 2007 ஐ  திறந்துகொண்டு மேலே உள்ள ஆஃபிஸ் பொத்தானை சொடுக்குக உடன்தோன்று பட்டியிலிலிருந்து New => Message => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக பின்னர் விரியும் சாளரத்தில் Options  என்ற தாவியின் திரையை தோன்றச்செய்க  அத்திரையில் tracking என்ற குழுவின் கீழுள்ள Voting Buttons என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

 உடன்  approve/reject, yes/no, yes/no/maybe, or  custom போன்ற  விடையுடன் கூடிய கீழிறங்கு பட்டியல் தோன்றும்  நாம் Are you coming to dinner? என்ற கேள்வியை நம்முடைய நண்பர்களுக்கு அனுப்பிட விழைவதால்  yes/no/maybe பொருத்தமானதாகும் அதனை தெரிவுசெய்து கொள்க

நம்முடைய நண்பர்களின் முகவரியைஅதனுடைய contact list என்ற பட்டியலிலிருந்து தெரிவுசெய்து கொண்டு Send என்ற பொத்தானை சொடுக்குக.

அவுட்லுக் 2003 ஐ  திறந்துகொண்டு மேலே கட்டளை பட்டையிலுள்ள new=> messgae=> options => voting and tracking  => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக

உடன் விரியும் சாளரத்தில் voting என்ற பொத்தானை சொடுக்குக பின்னர்ரியும் approve/reject, yes/no, yes/no/maybe, or custom  ஆகிய வாய்ப்புகளில்  yes/no/maybe என்பதை தெரிவுசெய்க.

 நாம் Are you coming to dinner? என்ற கேள்வியை நம்முடைய நண்பர்களுக்கு அனுப்பிட விழைவதால்  yes/no/maybe பொருத்தமானதாகும் அதனை தெரிவுசெய்து கொள்க.நம்முடைய நண்பர்களின் முகவரியைஅதனுடைய contact list என்ற பட்டியலிலிருந்து தெரிவுசெய்து கொண்டு Send என்ற பொத்தானை சொடுக்குக.
 நாம் அனுப்பிய செய்தியை பெறும் ஒவ்வொருவருக்கும் அந்த செய்தியில் ஒரு தொடுப்பு தம்முடைய விருப்பத்தை தொரிவிக்கும்படி கோரி நிற்கும்


நாம் தயாராக அனுப்பியுள்ள வாய்ப்புகளுள் ஒன்றை பெறுபவர் தெரிவுசெய்யவேண்டும்

 உடன் சாளரம் ஒன்று தோன்றி சாதாரண தம்முடைய விருப்ப வாக்கை மட்டும் தெரிவுசெய்து send the message now  என்பதை தெரிவுசெய்து அளிக்கலாம்  அல்லது Edit the response before sending என்பதை தெரிவுசெய்து தம்முடைய விரிவான பதிலை அளிக்கலாம்

 இவ்வாறு கேள்வியை அனுப்பி பெறபட்ட பதில்களை அவுட்லாக்கானது அட்டவணையாக தயார்செய்து வைத்திருக்கும்  நாம் இதனுடைய கோப்பகத்திற்கு சென்றுநம்முடைய கேள்வியையும் அதற்கான பதிலயையும் குறும்படமாக உருவாக்கி வைத்துள்ளதை கண்டு தெரிவுசெய்து சொடுக்கி திரையில் விரியச்செய்து பார்த்து அறிந்துகொள்ளலாம்

கருத்துத் தெரிவிக்கவும்
நண்பர்கள் அனைவருக்கும் குறுஞ்செய்திகளை ஒரே சொடுக்கில் அனுப்பமுடியும்

 மார்ச் 27, 2011 இல் 12:19 பிற்பகல் (மின்னஞ்சல்(e-mail), computer katturaikal)

செல்லிடத்துபேசி சேவை வழங்குபவர்கள் எங்கள் சேவையை பயன்படுத்துபவர்களுக்கு  தினமும் முன்னூறு குறுஞ்செய்திகளை இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம் என்பன போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களை அள்ளி வீசுவதன் வாயிலாக வாடிக்கையாளர்களை தத்தமது நிறுவனசேவையை பயன்படுத்துமாறு வளைத்து பிடித்துவிடுகின்றனர் அதன்பின்னர் ஆங்கில புத்தாண்டு பொங்கல் போன்ற முக்கியமான விழாக்காலங்களில்  செல்லிடத்து பேசியை பயன்படுத்துபவர்கள்  அந்த குறிப்பிட்ட நாட்களில் அனுப்புபடும் குறுஞ்செய்திகள் இலவசமன்று கட்டணமுடையவைஎன நம்முடைய கணக்கிலிருந்து சந்தடியில்லாமல் தொகையை அபகரித்து கொள்கின்றனர்  இவ்வாறான நிலையில்   Jubin Mitra என்ற கருவியின் வாயிலாக நாம் நம்முடைய நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இலவச குறுஞ்செய்திகளை நம்முடைய கணிணியின் மூலம் அனுப்பமுடியும்  இந்த கருவியை பயன்படுத்தி கொள்ள நம்முடைய கணினியில் ஜாவா இடைமுகப்பு நிறுவபட்டிருக்கவேண்டும் என்பது மட்டுமே நிபந்தனையாகும்  இந்த  Jubin Mitra என்ற  கருவியானது குறுஞ்செய்திகளை அனுப்புவதற்கு Way2sms என்ற  இணைய தளத்தின் சேவையை பயன்படுத்தி கொள்கின்றது

இந்தியா முழுவதுமுள்ள அனைத்து செல்லிடத்து பேசிகளுக்கும் எண்ணிக்கை வரம்பற்ற குறுஞ்செய்திகளை இலவசமாக இதன்மூலம் அனுப்பமுடியும்

ஒருகுழுவில் உள்ள நண்பர்கள் அனைவருக்கும் குறுஞ்செய்திகளை ஒரே சொடுக்கில் அனுப்பமுடியும்

இதில்ஒவ்வொரு குறுஞ்செய்தியும் எத்தனை எழுத்திற்குள் இருந்திட வேண்டுமென்ற நிபந்தணை எதவுமில்லை

இது பயன்படுத்துவதற்கு மிக எளிதானது

இது முன்கூட்டியே கட்டமைக்கபட்ட ஏராளமான மாதிரி குறுஞ்செய்திகளை தேவையெனில் பயன்படுத்திகொள்வதற்கேதுவாக தன்னகத்தே கொண்டுள்ளது

நம்மால் அடிக்கடி பயன்படுத்திகொள்ளபடும் நண்பர்களின் முகவரிகளை பட்டியலாக பாதுகாத்திடும் வசதி இதில் உள்ளது

நாம் அனுப்பும் குறுஞ்செய்திகள் நம்முடைய செல்லிடத்துபேசியின் எண்ணுடன் கிடைக்கும் வசதி கொண்டது.

இந்த பயன்பாட்டினை  இதன் வலைதளத்திலிருந்து  பதிவிறக்கம் செய்து நம்முடைய கணினியில் நிறுவியபின் கணினியில் JRE (JAVA Runtime environment)என்ற பயன்பாடு நம்முடைய கணினியில் உள்ளதாவென சரிபார்த்திடுக இல்லையெனில் http://way2sms.codeplex.com/releases/view/33184#DownloadId=143560  என்ற வலைதளத்திலிருந்து இதனையும் பதிவிறக்கம் செய்துநம்முடைய  கணினியில் நிறுவிக்கொள்க பின்னர் இந்த பயன்பாட்டின் வாயிலாக  Way2sms.com என்ற இணையதளத்திற்குள் தேவையான பயனாளரின் பெயர் கடவுச்சொற்களை உள்ளீடு செய்து உள்நுழைவு செய்க  பின்னர் குறுஞ்செய்தி அனுப்பவேண்டியசெல்லிடத்து பேசிஎண் அனுப்பவேண்டிய செய்தி ஆகியவற்றை தட்டச்சு செய்து send என்ற பொத்தானை சொடுக்குக.


கருத்துத் தெரிவிக்கவும்
ஜிமெயிலில் உள்ள பெரிய மின்னஞ்சல்களை கண்டுபிடித்து நீக்கம்செய்திட

 மார்ச் 13, 2011 இல் 10:54 மு.பகல் (மின்னஞ்சல்(e-mail), computer katturaikal)

நம்மில் இணையம் பயன்படுத்தும் பெரும்பாலானோர் மின்னஞ்சலுக்கென  ஜிமெயிலையே பயன்படுத்துகின்றனர். இதில் வரும் மின்னஞ்சல்களை சேர்த்து வைத்திட அதிகபட்சம்  7 ஜிபி அளவிற்கு இடம் தருவதால், பயானாளர்கள் பலரும் தம் மின்னஞ்சல் பெட்டிக்குள் வந்த மின்னஞ்சல்ளை பெரும்பாலும் அதிலிருந்து நீக்குவதில்லை. அதனால் இந்த நிணைவகம் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு நிரைந்துவிடும் அந்நிலையில் “You have run out of space for your Gmail account. You will not be able to send or receive any emails until you delete some items” என்ற ஒரு எச்சரிக்கை செய்தி நமக்கு கிடைக்கும். அதனை தவிர்க்க, நம்முடைய ஜிமெயிலின் மின்னஞ்சல் பெட்டியில் உள்ள மின்னஞ்சல்களில், அதிக அளவு இடத்தைப் பிடித்திருக்கும் மின்னஞ்சல்கள் எவையெவை எனக் கண்டறிந்து  அவற்றை நீக்கினால் நமக்கு போதுமான காலி நிணைவக இடம்கிடைக்கும்

இம்மின்னஞ்சல் பெட்டிக்குள் வருபவைகளில் தேவையற்ற இணைப்புகள், போட்டோக்கள், இமேஜ், வீடியோ கிளிப்கள் என அதிகம் இடம் பிடிக்கும் மின்னஞ்சல்கள் எவையெவையென   கண்டறிவதற்கு FindBigmai என்ற பயன்பாடு உதவுகின்றது . இதன் மூலம் நம்முடைய ஜிமெயிலின் மின்னஞ்சல் பெட்டியினை முழுமையாக ஆய்வு செய்யும்போது அவற்றுள் எந்ததெந்த மின்னஞ்சல்கள், அதிக அளவில் இணைப்புகளைக் கொண்டுள்ளன என்று இது காண்பித்து. அவற்றைத் தனியே வடிகட்டும். இதனை எவ்வாறு செயல்படுப்படுத்துவது என்று இப்போது காண்போம்.

1.        முதலில் http://findbigmail.com/ என்ற இணைய தளத்திற்கு செல்க.

2.       அங்கு நம்முடைய மின்னஞ்சல் முகவரியை அதற்காகவுள்ள Enter your email என்ற உரைபெட்டியில் தட்டச்சுசெய்து  அதனருகே உள்ள Click here என்ற பொத்தானை சொடுக்குக உடன் நம்முடைய ஜிமெயில் கணக்கிற்குள் புகுவதற்கான நம்முடைய அனுமதி கோரும் செய்தி திரையில் தோன்றும் அதனை ஆமோதித்து.. அனுமதி கொடுத்தவுடன், FindBigmail யானது தன்னுடைய ஆய்வுபணியைத் தொடங்கும்.


3 பெரிய அளவிலான இணைப்புகள், படங்கள், ஆவணங்கள் போன்றவற்றை பட்டியலிட்டு திரையில் காண்பிக்கும். இந்த பணிமுடிவடைவதற்கு  நம்முடைய ஜிமெயிலின் மின்னஞ்சல் பெட்டியில் உள்ள மின்னஞ்சல்களில் அளவைபொறுத்து  30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை ஆகும். இந்த பணி நடைபெற்றுக்க கொண்டிருக்கும் போது  நமக்கு வந்துள்ள மின்னஞ்சல்களை தடங்களில்லாமல் நாம்  பார்வையிடும் பணியையும் தெடர்ந்து மேற்கொள்ளலாம்.

4 இவ்வாய்வு நடக்கும்போதே, எத்தனை மின்னஞ்சல்களில் அதிக அளவில் இணைப்புகள் உள்ளன என்ற செய்தியையும் காண்பிக்கும். இந்த பணி முடியும் வரை, நம்முடைய தேடுபொறியின் இயக்கத்தை நிறுத்தம் செய்யவேண்டாம். இறுதியாக மிகப் பெரிய மின்னஞ்சல்கள் எத்தணை ஓரளவிற்கு இடத்தைப் பிடித்திருக்கும் மின்னஞ்சல்கள் எத்தணை என ஒரு வரைபடம் மூலம் திரையில் காண்பிக்கும். அதன் அருகே உள்ள தொடுப்பை சொடுக்கினால் அவைகளை திரையில் பட்டியலிடும். அவற்றில் தேவையானவற்றை தெரிவுசெய்து சொடுக்கி திறந்து படித்துப் பார்த்து, தேவையில்லை என்றால், அவற்றை நீக்கிவிடலாம்.

இதில் நம்முடைய மின்னஞ்சல்பெட்டியில் பல புதிய லேபிள்களை உருவாக்கும் வசதியுள்ளது அதன் மூலம் அதிக அளவில் இடம் பிடிக்கும் டாப் 20 மின்னஞ்சல்கள் எவையெவையென்று அவைகளின் அளவின் அடிப்படையில் அவற்றில் இடம் கொண்டிருக்கும் மின்னஞ்சல்களுக்கான லேபிள்கள் இருக்கும். இவற்றை ஜிமெயிலின் பக்கவாட்டில் இருக்கும் பக்கபட்டையில் காணலாம். இவற்றை தெரிவுசெய்து சொடு்க்கி அவைகளை  மொத்தமாகவும், தனித்தனியாகவும் அழிக்கலாம்.  இவற்றை Settings > Labels என்றவாறு கட்டளைகளை செயல்படுத்தியும் மொத்தமாக அழிக்க,லாம். அவ்வாறு நீக்கம்செய்யும்போது நமக்கு ஜிமெயிலின் மின்னஞ்சல் பெட்டியில் எவ்வளவு காலி இடம் கிடைக்கின்றது என்ற செய்தியும் திரையில் காணபிக்கும்


கருத்துத் தெரிவிக்கவும்
மின்னஞ்சல் சேவைகளில் முன்னோடியான yahoomail சேவையானது பல நவீன வசதிகளுடன் தற்போது வெளிவந்துள்ளது.

 மார்ச் 10, 2011 இல் 12:51 மு.பகல் (மின்னஞ்சல்(e-mail), computer katturaikal)

2005 ஆம் ஆண்டுக்கு பின்னர் தனது 279 மில்லியனுக்கும் மேற்பட்ட பயனாளர்களுக்கும் இந்நிறுவனம் மேற்கொண்டுள்ள மிகப்பெரிய மாற்றம் இதுவாகும்.
 மிகமுக்கியமாக குழுவிற்கும் சமூகவலைப்பின்னல்களுக்கும் இந்நிறுவனம் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது.மேலும் பின்வரும்  கூடுதலான வசதிகளை இது தற்போது வழங்கிவருகின்றது
அதிவேக செயற்பாடு - gmail hot mail போன்றவைகளைவிடவும் மேலும் முந்தைய தம்முடைய சேவையைவிடவும் இருமடங்கு வேகத்தில் மின்னஞ்சல் இயங்குமென இந்நிறுவனம் உத்தரவாதமளிக்கின்றது.
சமூகவலைப்பின்னல் தொடர்பு- யாஹூ மெயிலில் இருந்தவாறே பேஸ்புக், டுவிட்டர் ஆகியவற்றை நிகழ்நிலை படுத்துதலுடன் உடனடி த.யார்நிலை செய்தியையும் ( Instant messaging ) குறுந்தகவலையும் அனுப்பிடும் வசதியை கொண்டுள்ளது.
உள்வருகை பெட்டியிலிருந்தவாறே படங்களையும் வீடியோக்களையும் பார்வையிடும் வசதி உள்வருகை பெட்டியிலிருந்தவாறே பிக்காஸா (Picasa) பிளிக்கர் (Flickr) யூடியூப் (YouTube) போன்று இணையத்தளங்களில் இருந்து நி்ழற்படங்களையும் வீடியோக்களையும் பார்வையிடும் வசதி. தற்போது அளிக்கப்பட்டுள்ளது
விரும்பியவாறு மின்னஞ்சல்களைத் தேடுதல்- பயனாளர் தனக்குத்தேவையானதும்   முக்கியமானதுமான மின்னஞ்சல்களைத் தேடும் வசதி. அதாவது குறிப்பிட்ட நாள், அனுப்பியவரின் பெயர், இணைப்புகோப்புக்கள் ( Attachment ) ஆகியவற்றின் அடிப்படையில் மின்னஞ்சல்களை தேடிப்பெற முடியும்.
ஸ்பேம்களில் இருந்து பாதுகாப்பு- ஸ்பேம்களில் இருந்து மிகஅதிகபட்ச பாதுகாப்பு அளிக்கின்றது.

கூகுள்,பேஸ்புக் ஆகியவற்றின் வளர்ச்சியின் காரணமாக யாஹூ சற்று பின் தள்ளப்பட்டிருநாதாலும் இத்தகைய மாற்றங்களின் வாயிலாக தான் இழந்த தன்னுடைய இடத்தினை தக்கவைத்திட மேலேகூறிய வசதிகளை தற்போது வழங்கிவருகின்றது

Artikel Terkait

0 comments

Post a Comment

Cancel Reply