Monday, January 16, 2012

நணோ தொழில்நுட்ப்பம்? மிண்காந்த அலைவியல் கட்டுப்பாடு

1959 இல் நானோ பற்றி முதன் முதலில் பேசிய ரிச்சர்ட் ஃபெய்ன்மேன் - 24 தொகுப்பை உடைய பிரிட்டானியா என்சைக்ளோபீடியாவை ஏன் ஒரு குண்டூசித் தலையில் எழுத முடியாது ? என்று கேட்டார். அதற்கான வழியையும் அவரே சொன்னார்.
குண்டூசித் தலையை 25000 மடங்கு பெரிதாக்கினால் அதில் எழுத இடம் பிறந்துவிடும் - அல்லது என்சைக்ளோபீடியாவை 25000 மடங்கு சுருக்கினாலும் இடம் போதுமானதாகிவிடும். அத்தனை மடங்கு சுருக்கிய பிறகும் கண் பார்க்க முடிகிற ஒரு சிறு புள்ளியில் 100 அணு இருக்கும் - அப்புறம் என்ன ? பிளாஸ்டிக்கில் ஒரு மோல்ட் எடுத்து சிலிக்காவில் ஃபிலிம் எடுத்து மைக்ரோஸ்கோப்பில் படிக்க முடியும். அயான்களின் துணை கொண்டு டி.வி.யின் காதோட் கதிர்களைப்போல எழுதவும் முடியும்.
இப்படி உலகின் அத்தனை புத்தகங்களையுமே 3 சதுரமீட்டர் இத்தில் அடக்கிவிடலாம். இது ஒன்றும் புதிதல்ல என்றார் பெய்ன்மேன் - இயற்கையில் நாம் பார்க்கிற அத்தனை சிறிய ஆலவிதையில் எத்தனை செய்தி எழுதப்பட்டிருக்கிறது ? மிகச் சிறிய செல்லில் மனித உடலின் அத்தனை செய்தியும் வரையப்பட்டிருக்கு இல்லையா ? 50 அணுவில் ஒரு செய்தி என்று டி.என்.ஏ மாலிக்யூல்களால் ஆன எத்தனை சங்கிலிகள் ஒரு செல்லில் ? இப்படி படைப்பின் ஏகப்பட்ட விவரத்தை தன்னில் அடக்கிக் கொண்டு , நிறைய பொருள்களைத் தயாரித்தபடியே அங்குமிங்கும் நடமாடும் - பயாலஜி - செல்களைக் காட்டுகிறார் அவர். அது மாதிரி சிறிய இயந்திரங்களை நாம் தயாரிக்க முடிந்தால் ???
கம்ப்யூட்டரைவிட ஆயிரம் மடங்கு திறன் படைத்த நம் மூளையின் அளவு சிறியதாக இருப்பதை 1959 இல் சுட்டிக்காட்டி அவர் மிகமிகச் சிறிய அளவில் கம்ப்யூட்டர் வரவேண்டும் என்றார். மிக வேகமாக அவை செயல்பட வேண்டும் என்றால் அவை மிகச் சின்னதாவதைத் தவிர வேறு வழியில்லை என்றார். பொருள் சிறியதாகும் பொழுது இடைவெளி குறைகிறது. ஒரு செய்தியை ஒரு இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்குச் செலுத்த முடிகிற அதிக பட்ச வேகம் ஒளியின் அளவுதான். வேகமாகச் செயற்பட - நகரும் நேரத்தைச்சுருக்க அது சின்னதாவதைத் தவிர வேறு வழியில்லை.
ஒரு செயற்கை மினியேச்சர் டாக்டரை ரத்தக்குழாய்குள் செலுத்த முடிந்தால் அவர் அத்தனை எளியதாய். பழுதடைந்த வால்வைக் கண்டுபிடித்து சரிசெய்வார் -என்று அப்பொழுதே கேட்டார். ஒரு புத்தகத்தை 25000 இல்ஒரு பங்கு இடத்தில் பதிப்பவருக்கு 1000 டாலர் பரிசும் அறிவித்தார். 1959 இல் அவர் கேட்ட அந்தக் கேள்வியின் பதில்தான் இன்றைய நானோ டெக்னாலஜியின் வளர்ச்சி.
அதற்குப்பின் 80 களில் எரிக் ட்ரெக்ஸ்டெர் (இவர் தான் நானோ தொழில்நுட்பத்திற்கு பெயர் சூட்டியவர்) எழுதிய Engines of Creation புத்தகம் ஒரு கலக்கு கலக்கிற்று. பின்னே ? இன்னும் சில அனேகமாக எதையுமே தயாரித்துவிடக் கூடிய மாலிக்யூலர் இயந்திரங்கள் மள மளவென்று பெருகிவிடும் என்றார்.
மாலிக்யூலர் ? ஆம். இறைவன் படைத்தவற்றில் அணு ஒன்று மட்டும்தான் மனிதனின் கை வைக்க முடியாமல் இருந்தது. இப்போது அதிலும்புகுந்து விட்டோம். கரியின் அணுக்களைகொஞ்சம் கலைத்துப் போட்டால் அதுவே வைரமாகிவிடுகிறது. இல்லையா ? அதன் ஆதார அடுக்கில் கார்பனின் அமைப்பில் நானோ அளவில் உள்ள வித்யாசம்தான் கரியை வைரமாக்குகிறது.
இப்படி பொருளை அதன் அணு , டி.என்.ஏ , புரோட்டீன் எல்லாமே அளவில் கையாண்டு கருவிகள் புனைந்து விந்தைகள் புரிவதுதான் நானோ தொழில்நுட்பம். நம்உடல் செல்களை இயற்கையின் நானோ இயந்திரங்கள் எனலாம். எனவே மாலிக்யூல்கள் எந்திரங்களாக வேலை செய்ய முடியும் என்பது இயற்கையிலிருந்தே அறிகிறோம். என்சைம்கள் , டி.என்.ஏ , புரோட்டீன்கள் எல்லாமே எந்திரமாகவே செயல்படுகின்றனஇல்லையா என்கிறார் எரிக்.
நானோ உலகின் அளவுகள் தலைசுற்ற வைக்கும். ஒரு மீட்டரில் பில்லியனில்ஒரு பங்குதான் ஒரு நானோ மீட்டர் என்பது ( 10 ன் ஒன்பது அடுக்கு)
உயிரியல் வினோதங்கள் செயல்படும் உயரிய அளவுகள் அவை. எதுக்கு இப்படி கண்ணைச் சுருக்கிக் கொண்டு சிரமப்பட வேண்டும் ? ஆதாயமில்லாமல் அந்த மினியேச்சர் உலகத்தில் நுழைவார்களா நம் ஆசாமிகள் ?
உள்ளே நேர்த்தியாகச் செயல்பட வாய்ப்புகள் அதிகம். அங்கே பொருள்களின் அளவைவிட , பொருள்களின் இடையே உள்ள தூரம் மிக மிக அதிகம் , எடுத்துக் காட்டாக , ஒரு அணுவின் அகலம் சுமார் 1.5 நானோ மீட்டர் என்றால் அதன் உட்கருவின் அகலம் 0.00001 நானோ மீட்டர். ஒரு மில்லிமீட்டர் குண்டூசித் தலையின் அகலம் ஒரு மில்லியன் நானோ மீட்டர். அப்படியானால் அந்த அளப்பரிய பரப்பில் எத்தனை துல்லியமாக பொருள்கள் இயங்க முடியும் , பொருள்களைஇயக்க வைக்க முடியும் பாருங்கள் ? ! ?
அணுக்களும் மாலிக்யூல்களும்

Artikel Terkait

0 comments

Post a Comment

Cancel Reply