Thursday, January 26, 2012

பைலை மவுஸ் தூக்கிக் கொண்டு வருமா!


மவுஸ் இன்று கம்ப் யூட்டரின் பிரிக்க முடியாத ஒரு பகுதியாக மவுஸ் மாறிவிட்டது. லேப் டாப்பிற்கான டச் பேட் மற்றும் கிராபிகல் பென் போல, மவுஸ் மாறிவிட்டது; செயல்படுகிறது. மவுஸ் இல்லாமல் கம்ப்யூட்டர் இயக்கத்தை எண்ணிப் பாருங்கள். அய்யய்யோ என்கிறீர்களா! ஆம் நிச்சயம் அது வெகு கஷ்டமான காரியம். குறிப்பாக இன்டர்நெட் அல்லது வழக்கமான செயல் பாடு இல்லாமல் மிகவும் ஹெவியான கம்ப்யூட்டர் செயல்பாடாக இருப்பின் மவுஸ் இல்லாமல் இயங்குவது மிகவும் சிரமமான ஒன்றாக மாறிவிடும்.

இதற்குக் காரணம் மவுஸ் நம் பெரும்பாலான கம்ப்யூட்டர் பணிகளை மிக மிக எளிதாக மாற்றுகிறது. எடுத்துக் காட்டாக டைரக்டரி ஒன்றில் உள்ள ஒரு பைலை மவுஸ் வருவதற்கு முன்னால் டாஸ் இயக்கத்தில் இன்னொரு டைரக்டரிக்கு மாற்ற வேண்டுமானால் டிரைவில் உள்ள கமாண்ட் ப்ராம்ப்ட் என்னும் கட்டளைப் புள்ளியில் சரியான வகையில் அதன் வழியினை அமைத்து என்டர் தட்ட வேண்டும்.

இதில் ஏதேனும் கூடுதலாக ஒரு கமா, அல்லது இடைவெளி இருந்தால் கட்டளை நிறைவேறாது. மவுஸ் என்றால் அப்படியே இரண்டு எக்ஸ் புளோரர் விண்டோவினைத் திறந்து பைலின் மீது மவுஸின் கர்சரை வைத்து அழுத்திப் பிடித்தவாறே இழுத்து வந்து போட்டுவிடலாம்.

இது ஒன்றும் புதிய விஷயம் இல்லை; கம்ப்யூட்டர் பயன் படுத்தும் நான் அனைவரும் செய்திடும் வேலைதான். இதில் என்ன இருக்கிறது என்கிறீர்களா? மேலே படியுங்கள்.

எப்படி வெவ்வேறு இடங்களுக்கு பைலை மவுஸ் மூலம் எடுத்துச் செல்கிறீர்கள். முதலில் பைலின் பெயர் மீது கிளிக் செய்கிறீர்கள்.

பின்னர் மவுஸின் இடது பட்டனை (இடது கைப் பழக்கம் இருந்தால் வலது பட்டன்) அழுத்தியவாறே இழுத்து எங்கு விட வேண்டுமோ அங்கு விட வேண்டும். இடையே எங்காவது விட்டுவிட்டால் என்னவாகும்? திருவிழாவில் தொலைந்த குழந்தை போல எந்த போல்டர் அல்லது டைரக்டரி என்று அறியமுடியாத இடத்தில் பைல் அமர்ந்து கொள்ளும்.

மவுஸைக் கட்டாயம் கவனமாக அழுத்தியவாறு தான் இந்த பைல் இட மாற்று வேலையைச் செய்திட வேண்டுமா? இதற்குப் பதிலாக விண்டோஸ் இயக்கத்திடம் எனக்குப் பதிலாக உன்னுடைய மவுஸை இந்த பைலைப் பிடித்து எடுத்துக் கொண்டு போகச் சொல்லு.

நான் அந்த நேரத்தில் ஒரு மடக்கு காப்பியைக் குடித்துக் கொள்கிறேன் என்று சொல்ல முடியுமா? முடியும். என்ன முடியுமா? எப்படி என்று ஆச்சரியப்பட வேண்டாம். மேலே படியுங்கள்.

விண்டோஸ் இயக்கத்தில் மவுஸ் பேனலில் இந்த வசதி தரப்பட்டுள்ளது. மவுஸால் பைலை சில நொடிகள் கிளிக் செய்திடலாம். பின் அப்படியே அந்த பைலை மவுஸ் பிடித்துக் கொள்ளும்.

நீங்கள் விரல்களை அல்லது கையை எடுத்துவிடலாம். அப்போது உங்கள் பைல் மவுஸுடன் தானாக லாக் ஆகிவிடும். இதன் பின் உங்கள் மவுஸை அதன் பட்டனைப் பிடித்து அழுத்தாமல், அதனை மட்டும் இழுத்து பைலை வேண்டிய இடத்தில் விட்டுவிடலாம். இது எப்படி என்று பார்த்து செட் செய்வோமா!

இந்த தொழில் நுட்பத்தை (!) மேற்கொள்ள முதலில் Start பட்டன் அழுத்தித் திறக்கவும். பின் Control PanelIz ஐத் திறக்கவும். கண்ட்ரோல் பேனலில் நீங்கள் Classic View வினைக் கொண்டிருப்பதனை உறுதி செய்து கொள்க.

Category  வியூவில் இருந்தால் மாற்றிக் கொள்க. இந்த பட்டியலில் Mouse  ஐகானத் தேர்ந்தெடுக்கவும். இப்போது Mouse Properties  விண்டோ கிடைக்கும். இந்த விண்டோவின் மேலாக உள்ள டேப்களைக் காணவும். Buttons   என்று ஒரு டேப் காணப்படும்.

இந்த விண்டோவின் கீழ்ப்பகுதியைப் பார்க்கவும். இங்கு தான் Click Lock Properties காணப்படும். இதில்  “Turn On ClickLock ” என்று இருப்பதில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும்.

இப்போது கிளிக் லாக் செட்டிங்ஸ் பட்டன் தெரியும். இதில் கிளிக் செய்தால் ஒரு சிறிய விண்டோ எழுந்து வரும். இதுதான் கிளிக் லாக் செட்டிங்ஸ் விண்டோ. இதில் ஒரு பார் இருக்கும்.

2) இந்த பாரில் செட் செய்வதன் மூலம் (Short Long) மவுஸ் உங்கள் ஆப்ஜெக்டை எவ்வளவு நேரம் உங்களுக்காகப் பிடித்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதனைத் தீர்மானிக்கலாம்.

நீண்ட நேரம் பிடித்துக் கொண்டிருக்க வேண்டும் என்றால் Long  என்பதை செலக்ட் செய்திடலாம். ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த பைல் அல்லது ஆப்ஜெக்ட்டைப் பிடித்துக் கொண்டிருக்கும் வேலையை நீங்கள் உங்கள் மவுஸ் மூலம் பிடித்துக் கொள்ளவில்லையே தவிர அதனை அதற்கென உருவாக்கப்பட்ட சாப்ட்வேர் புரோகிராம் பிடித்து வைத்துக் கொண்டுள்ளது.

இதனை சோதனை செய்திட Short   அருகே ஒரு புள்ளியில் செலக்ட் செய்து பின் மவுஸால் விண்டோவின் மேல் பாரில் கிளிக் செய்து பின் மவுஸை மட்டும் நகர்த்துங்கள். விண்டோ நகர்வதனைப் பார்க்கலாம்.

மவுஸின்பட்டனை அழுத்தாமல் விண்டோ நகர்வது ஆச்சரியமாக இல்லை! Long தேர்ந்தெடுத்தால் அந்த நேரத்திற்கு முன்பாகவே ஆப்ஜெக்டை விட வேண்டும் என்றால் நீங்களாக மேனுவலாக பட்டனைக் கிளிக் செய்து மேற்கொள்ள வேண்டும்.  இந்த கிளிக் லாக் செட்டிங்ஸ் முடித்து அனைத்து ஓகே பட்டன்கள் மீதும் கிளிக் செய்து வெளியேறுங்

Artikel Terkait

0 comments

Post a Comment

Cancel Reply