Monday, January 16, 2012

பலருக்கு பயனாக அமையும் என்பதால் பல தளங்கள், வலைப்பதிவுகளில் இருந்து எடுத்து அவற்றை இங்கு தொகுத்து வழங்குகின்றேன்

பிராட்பேண்ட் இன்டர்நெட்

பிராட்பேண்ட் இன்டர்நெட் வேகம் என்ன என்று தெரிந்து கொள்ள பல வழிகள் உள்ளன. ஏதேனும் ஒரு சர்ச் இஞ்சினைத் திறந்து Broadband internet speed test என்று கொடுத்தால், இணையத்தில் இதற்கென இயங்கும் பல தளங்களின் முகவரிகள் தரப்படும். இணைய தொடர்பில் இருக்கையில், இவற்றின் மீது கிளிக் செய்தால், உடனே அந்த தளம் திறக்கப்பட்டு, உங்கள் இன்டர்நெட் வேகம் குறித்த சோதனையை மேற்கொள்ளவா என உங்களிடம் கேட்டு, விடை பெற்றபின், சோதனையிடப்பட்டு, பைல் அப்லோட் மற்றும் டவுண்லோட் வேகம் என்னவென்று காட்டப்படும்.

அதில் உள்ள மற்ற விளம்பரங்கள் பக்கம் உங்கள் கவனத்தைத் திருப்ப வேண்டாம். என்னைப் பொறுத்தவரை, இந்த வகையில் தீங்கில்லாத தளங்கள் இரண்டைக் கூறுகிறேன். அவற்றின் முகவரிகள்: www.speedtest.net/ மற்றும் http://testinternetspeed.org




நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.

நண்பன்
தலைமை நடத்துனர்


பதிவுகள்:-:  23008
சேர்ந்தது:-:  29/10/2010




 Re: தெரிந்து கொள்ளலாம் கணனி தொகுப்பு 1

 by நண்பன் on 2011-02-25, 02:39

இணையதளம்


சில நேரங்களில் சில இணைய தளங்களைப் பெற முடியாமல் போய்விடுகிறது. அதற்கு என்ன காரணமாக இருக்கும்?

இணையத்தில் இருக்கையில், ஒரு தளம் கிடைக்காமல் இருப்பதற்குப் பல காரணங்கள் உண்டு. உங்களுடைய ரௌட்டர், கம்ப்யூட்டர், பிரவுசர் என எது வேண்டுமானாலும், பிரச்னையைக் கொண்டிருக்கலாம். எனவே முதல் சோதனையாக, வேறு ஒரு பிரவுசரைப் பயன்படுத்திப் பார்க்கவும்.

கம்ப்யூட்டரை ரீ பூட் செய்வது இன்னொரு நல்ல வழி. கம்ப்யூட்டர் இயக்கத்தை நிறுத்தி, மோடம், ரௌட்டர் இணைப்புகளை நீக்கி, மீண்டும் இணைத்துப் பயன்படுத்திப் பார்க்கவும். அந்த தளத்தின் வழக்கமான முகவரி இல்லாமல், அதன் ஐ.பி. முகவரியினை எண்களில் தந்து பார்க்கவும். தளத்தின் முகவரியினை அதன் எண்களில் பெற, http://www.selfseo.com/ find_ip_address_of_a_website.php என்ற முகவரியில் உள்ள தளத்தினை அணுகவும்.
இதற்குப் பின்னரும் அந்த தளம் கிடைக்கவில்லை என்றால், சற்று ரிலாக்ஸ் செய்திடவும்.

அந்த தளத்தில் தான் பிரச்னை. எனவே சில மணி நேரம் கழித்து முயற்சிக்கவும். இப்போதும் கிடைக்கவில்லை என்றால், இன்னொரு கம்ப்யூட்டர் மூலமாக முயற்சிக்கவும்.




நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.

நண்பன்
தலைமை நடத்துனர்


பதிவுகள்:-:  23008
சேர்ந்தது:-:  29/10/2010




 Re: தெரிந்து கொள்ளலாம் கணனி தொகுப்பு 1

 by நண்பன் on 2011-02-25, 02:42

டெலீட்


சிலவேளைகளில் பைல் ஒன்றை டெலீட் செய்திட கட்டளை கொடுக்கும்போது இதை
"அழித்து ரீசைக்கிள் பின்னுக்கு அனுப்பவா" என்ற கேள்வி கேட்கப்படாமலேயே
பைல் அழிக்கப்பட்டு விடுகிறது.

இதற்குக் காரணம் ரீசைக்கிள் பின் அமைப்பில் சின்ன மாற்றம் எப்போதாவது நம்மை
 அறியாமலேயே ஏற்பட்டிருக்கலாம். டெஸ்க் டாப் சென்று, ரீசைக்கிள் பின்
ஐகானில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் ப்ராப்பர்ட்டீஸ்
தேர்ந்தெடுக்கவும். இப்போது ரீசைக்கிள் பின் ப்ராப்பர்ட்டீஸ் பாக்ஸ்
எழுந்து வரும். இதில் பல டேப்கள் இருக்கும். உங்கள் கம்ப்யூட்டரின் ஹார்ட்
ட்ரைவ் ஒவ்வொன்றுக்கும் ஒரு டேப் இருப்பதோடு, குளோபல் என்று ஒரு டேப்
இருக்கும். இதில் கிளிக் செய்திடவும். இந்த பாக்ஸில் கீழாக டிஸ்பிளே டெலீட்
 கன்பர்மேஷன் டயலாக் என ஒரு வரி இருக்கும். அதில் உள்ள சிறிய கட்டத்தில்,
டிக் அடையாளம் ஏற்படுத்தி, ஓகே கிளிக் செய்து மூடவும். அவ்வளவுதான். அடுத்த
 முறை நீங்கள் கோப்பினை அழிக்க கட்டளை கொடுத்தாலும், என்ன அழித்து குப்பைத்
 தொட்டிக்கு அனுப்பட்டுமா? எனக் கேட்டு உங்களிடம் ஓகே கிடைத்த பிறகே,
கோப்பு அழிக்கப்படும்.




நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.

நண்பன்
தலைமை நடத்துனர்


பதிவுகள்:-:  23008
சேர்ந்தது:-:  29/10/2010




 Re: தெரிந்து கொள்ளலாம் கணனி தொகுப்பு 1

 by நண்பன் on 2011-02-25, 02:42

FILE களை அழிக்க முடியவில்லையா


ஹார்ட் டிஸ்க்கில் இடம் குறைந்து வருகிறது. தேவையற்ற சில பைல்களை
அழிக்கலாமே என்று முயற்சிப்போம். அப்போது நமக்கு எதிரியாக கம்ப்யூட்டர்
நடந்து கொள்ளும். பைலை அழிக்க முடியாது (“Cannot Delete File”) என்று
அதிரடியாகத் தகவல் தரும். அது ஒரு டாகுமெண்ட் பைலாகவோ அல்லது மியூசிக்
மற்றும் பட பைலாகவோ இருக்கலாம். என்ன இது இவ்வாறு எதிர்வாதம் செய்கிறது?
என்று எண்ணி மறுபடியும் மறுபடியும் முயற்சி செய்வோம்; ஆனால் மீண்டும்
மீண்டும் அதே செய்திதான் வரும்.

சில வேளைகளில் காரணங்களும் காட்டப்படும். ஹார்ட் டிஸ்க்கில் போதுமான இடம்
இல்லை. அதனால் அழிக்க முடியவில்லை என்று காரணம் கிடைக்கலாம். இது இன்னும்
அதிகமான குழப்பத்தில் உங்களை சிக்க வைக்கும். ஏனென்றால் அதிக இடம் வேண்டும்
 என்பதற்காகத்தானே நீங்கள் பைலை அழிக்க முயற்சிக்கிறீர்கள். சில
பைல்களுக்கு இந்த பைலை இன்னொருவர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். அல்லது
இன்னொரு புரோகிராம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. அதனால் அழிக்க முடியாது
 என்று காரணம் வரலாம்.

எனவே அழிப்பதாக இருந்தால் அந்த பைலைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும்
புரோகிராமை முதலில் நிறுத்து என்று செய்தி கிடைக்கும். இப்ப என்னதான்
செய்றது? என்ற பெரிய கேள்விக் குறியுடன் நீங்கள் மானிட்டரைப் பார்த்துக்
கொண்டு அமர்ந்துவிடுவீர்கள், இல்லையா? கீழே சில டிப்ஸ்கள் தரப்பட்டுள்ளன.
அவற்றைப் பின்பற்றினால் இந்த பிரச்னைகளிலிருந்து தப்பிக்கலாம்.

முதலில் நீங்கள் அழித்திட எண்ணும் பைல் கம்ப்யூட்டரில் எங்கே உள்ளது என்று
சரியாகத் தெரிந்து கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக “myessay. txt” என்னும்
பைல் என்னும் போல்டரில் இருக்கலாம். இதனுடைய சரியான முகவரி C:\Documents
and Settings\ User Name \ My Documents என்பது. பைலின் பெயரையும் இந்த
முகவரியையும் ஒரு பேப்பரில் குறித்துக் கொள்ளுங்கள்.

இனி கம்ப்யூட்டரை ரீ ஸ்டார்ட் செய்திடுங்கள். கம்ப்யூட்டர் பூட் ஆகும் போது
 எப்8 கீயை அழுத்துங்கள். அப்போது திரையில் Advanced Boot Options Menu
மெனு கிடைக்கும். அந்த மெனுவில் Safe Mode with Command Prompt என்ற
பிரிவில் கிளிக் செய்திடவும். இனி டாஸ் ப்ராம்ப்ட்டில் கம்ப்யூட்டர் பூட்
ஆகி நிற்கும். இனி டாஸ் மோடில் துடிக்கும் புள்ளியில் cd C:\Documents and
Settings\Your Name\My Documents என டைப் செய்திடவும் இதில cd என்பது
Change Directory என்பதைக் குறிக்கிறது.

டைப் செய்து என்டர் அழுத்தியவுடன் டாஸ்கர்சர் உங்கள் பைல் உள்ள
டைரக்டரியில் சென்று நிற்கும். இனி del myessay.txt என டைப் செய்து என்டர்
தட்டினால் நீங்கள் பல வழிகளில் டெலீட் செய்திட முயன்று தோற்றுப் போன பைல்
இப்போது நீக்கப்பட்டுவிடும். அப்பாடி! கம்ப்யூட்டர் உங்களுக்குக் கொடுத்த
சவாலில் வெற்றி பெற்றுவிட்டீர்களா! சந்தோஷமா!!




நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.

நண்பன்
தலைமை நடத்துனர்


பதிவுகள்:-:  23008
சேர்ந்தது:-:  29/10/2010




 Re: தெரிந்து கொள்ளலாம் கணனி தொகுப்பு 1

 by நண்பன் on 2011-02-25, 02:43

இன்டர்நெட் இணைப்பைக் காட்டும் ஐகான்


கம்ப்யூட்டர் டாஸ்க் பாரில், இன்டர்நெட் இணைப்பைக் காட்டும் ஐகான் தெரியாவிட்டால் அதனை அங்கு வரவழைக்க பின்வரும் முறையை கையாளவும்

விண்டோஸ் எக்ஸ்பியில், ஸ்டார்ட் (Start) ஐகான் கிளிக் செய்திடுங்கள். இதில்
 செட்டிங்ஸ் (Settings) பிரிவு செல்லுங்கள். அதில் கண்ட்ரோல் பேனல்(Control
 Panel) தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடுங்கள். கிடைக்கும் கண்ட்ரோல் பேனல்
கட்டத்தில் காட்டப்படும் ஐகான்களில், Network Connections என்று உலக
உருண்டை படத்துடன் உள்ள ஐகானில் கிளிக் செய்திடுங்கள். இப்போது நீங்கள்
உங்கள் சிஸ்டத்தில் செட் செய்த, இன்டர்நெட் உட்பட அனைத்து நெட்வொர்க்
இணைப்புகளுக்கான ஐகான்கள் காட்டப்படும். உங்களின் இன்டர்நெட் இணைப்பு
ஐகானைத் தேர்ந்தெடுங்கள். இதில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில்
General டேபினைத் தேர்ந்தெடுக்கவும். இதில் “Show icon in notification
area when connected” என்ற வரியில் உள்ள சிறிய பாக்ஸில், டிக் அடையாளத்தினை
 ஏற்படுத்தி, பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி நோட்டிபிகேஷன்
ஏரியாவில், ஐகான் காட்டப்படும்.

உங்கள் சிஸ்டம் விஸ்டா அல்லது விண்டோஸ் 7 எனில்:

விண்டோஸ் டாஸ்க்பாரில் ரைட் மவுஸ் பட்டனைக் கிளிக் செய்திடவும். கிடைக்கும்
 மெனுவில் Properties தேர்ந்தெடுக்கவும். இதில் Notification Area டேபில்
கிளிக் செய்திடவும். இதில் நிறைய ஆப்ஷன்ஸ் கிடைக்கும். இதில் show or hide
Clock, Volume, Network and Power என்பதனைத் தேர்ந்தெடுங்கள். இதில்
Network பாக்ஸில் டிக் அமைக்கவும். இதில் காட்டப்பட்டுள்ள மற்ற விஷயங்களைப்
 படித்துப் பார்த்து, நீங்கள் விரும்பினால், மேலும் சில மாற்றங்களை
அமைக்கலாம். அடுத்து அப்ளை (Apply) கிளிக் செய்து, பின் OK கிளிக் செய்து
வெளியேறவும். இன்டர்நெட் ஐகான் காட்டப்படாததனால், இணைய இணைப்பு கிடைக்காது
என்று எண்ண வேண்டாம். அதே போல இணைய இணைப்பின் வேகம் அறிய,Free Internet
Speed Test என்று ஏதேனும் ஒரு சர்ச் இஞ்சினில் கொடுத்துக் கிடைக்கும்
தளங்களின் மூலம், இணைய இணைப்பு வேகத்தை அறியலாம்.




நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.

நண்பன்
தலைமை நடத்துனர்


பதிவுகள்:-:  23008
சேர்ந்தது:-:  29/10/2010




 Re: தெரிந்து கொள்ளலாம் கணனி தொகுப்பு 1

 by நண்பன் on 2011-02-25, 02:45

குயிக் லாஞ்ச் பார்



குயிக் லாஞ்ச் பார் மூலம் அதிக பயன் பெறலாம். வேகமாக செயல்பட என்று தான்
குயிக் லாஞ்ச் பார் (Quick Launch Bar) என்று பெயரிட்டு விண்டோஸ் இதனை
நமக்குத் தந்துள்ளது. புரோகிராம், அப்ளிகேஷன், பைல் போன்றவற்றை, குறைவான
நேரத்தில் இயக்கத்திற்குக் கொண்டு வர இந்த குயிக் லாஞ்ச் பார்
பயன்படுகிறது. டெஸ்க்டாப் அல்லது ஸ்டார்ட் மெனு, ஆல் புரோகிராம்ஸ்
செல்லாமல், மேலே குறிப்பிட்டவற்றை இயக்க இது வழி தருகிறது.

திரையின் கீழாக உள்ள, ஸ்டார்ட் பட்டைக்கு வலதுபுறமாக உள்ள, டாஸ்க் பாரில்
இடது பக்கம் இந்த பார் அமைக்கப்படுகிறது. அது இல்லை என்றால், உடனே
அமைத்துவிடலாம். முதலில், டாஸ்க்பாரில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக்
செய்திடவும். இப்போது ஆப்ஷன் மெனு ஒன்று கிடைக்கும். இதில் தரப்பட்டுள்ள
ஆப்ஷன்களில் ஒன்றாக, Quick Launch Bar இருக்கும். இதில் கிளிக் செய்தால்,
ஒரு சிறிய டிக் அடையாளம் ஏற்படுத்தப்படும். இப்போது குயிக் லாஞ்ச் பார்
கிடைக்கும். இதில் நாம் அதிகம் அடிக்கடி பயன்படுத்தப்படும் ஐகானை, டெஸ்க்
டாப்பிலிருந்து இழுத்து இதில் விட்டுவிடலாம். இரண்டு இடங்களிலும் அந்த
ஐகான் இருக்கும். குயிக் லாஞ்ச் பாரில் உள்ள ஐகானில் ஒரு கிளிக் செய்தாலே,
அந்த புரோகிராம் இயக்கத்திற்கு வரும்




நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.

நண்பன்
தலைமை நடத்துனர்


பதிவுகள்:-:  23008
சேர்ந்தது:-:  29/10/2010




 Re: தெரிந்து கொள்ளலாம் கணனி தொகுப்பு 1

 by நண்பன் on 2011-02-25, 02:45

அந்தப் பக்கம் மட்டும் அச்சடிக்க


வேர்ட் டாகுமெண்ட் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். பார்த்துக்
கொண்டிருக்கும் பக்கம் மட்டும், அதனை மட்டும், பிரிண்ட் எடுக்க வேண்டும்
என்றால் என்ன செய்யலாம். பைல் மெனு சென்று பிரிண்ட் கொடுத்து, கிடைக்கும்
விண்டோவில் current page செலக்ட் செய்து என்டர் அழுத்தும் வேலையைக்
குறைக்கும் வழி ஒன்று உள்ளது. பிரிண்ட் எடுக்க வேண்டிய பக்கத்தில் கர்சரை
வைத்துக் கொண்டு பின் Ctrl + P மற்றும் Alt + E அழுத்தவும். அந்தப் பக்கம்
மட்டும் பிரிண்ட் ஆகும்.




நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.

நண்பன்
தலைமை நடத்துனர்


பதிவுகள்:-:  23008
சேர்ந்தது:-:  29/10/2010




 Re: தெரிந்து கொள்ளலாம் கணனி தொகுப்பு 1

 by நண்பன் on 2011-02-25, 02:46

அப்போதைய ஹிஸ்டரியை நீக்க


பலர் பயன்படுத்தும் கம்ப்யூட்டரினை நீங்களும் பயன்படுத்துபவராக இருந்தால்,
நீங்கள் அதில் பார்த்த இணைய தள முகவரிகளை மற்றவர்கள் அறிந்து கொள்ளாமல்
இருக்க வேண்டும் என நீங்கள் விரும்பலாம். பயர்பாக்ஸ் பிரவுசரில் இதனை இரு
வழிகளில் மேற்கொள்ளலாம்.
முதலாவதாக பிரைவேட் பிரவுசிங் என்னும் தற்போதைய வசதி மூலம், நாம் செல்லும்
தளங்களின் முகவரிகள் பிரவுசரில் பதியப்படாமல் பார்த்துக் கொள்ளலாம்.

இன்னொரு வழி, ஹிஸ்டரியில் பதிந்துள்ள முகவரிகளை அழிப்பது.

ஆனால் அன்றைக்கு, அந்த பயன்படுத்துதலில், நீங்கள் கண்ட தளங்களை எப்படி நீக்குவது?

பயர்பாக்ஸ் பிரவுசரில் நீங்கள் அப்போது மேற்கொண்ட தளங்கள் குறித்த தகவல்களை மட்டும் நீக்கும் வசதி தரப்பட்டுள்ளது.


Ctrl+Shift+Del அழுத்துவதன் மூலம், அப்போது பயன்படுத்திய தளங்களை நீக்கும் வசதி கிடைக்கிறது.

அல்லது Tools > Clear Recent History எனச் சென்று இந்த வசதியினைப்
பெறலாம். இந்த வழிகள் மூலம் கிடைக்கும் விண்டோவில், நீக்கப்படக் கூடிய
அனைத்து தகவல் வகைகளும் கிடைக்கின்றன. இந்த தகவல்களின் மேலாகக்
காட்டப்படும் நேரம், நம் வேலையை எளிதாக்குகிறது. இந்த மெனுவினைக் கீழாக
இழுத்தால், கடந்த ஒரு மணி நேரத்தில், இரண்டு அல்லது நான்கு மணி நேரங்களில்
என, நேரத்தினைக் கணக்கிட்டு, பார்த்த தளங்களை அழிக்கலாம்.




நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.

நண்பன்
தலைமை நடத்துனர்


பதிவுகள்:-:  23008
சேர்ந்தது:-:  29/10/2010




 Re: தெரிந்து கொள்ளலாம் கணனி தொகுப்பு 1

 by நண்பன் on 2011-02-25, 02:47

ஃபைல் ப்ராப்பர்ட்டீஸ்


பைல் ஒன்றின் தன்மைகளை நாம் அறிந்து கொள்ள பைல் ப்ராப்பர்ட்டீஸ் என்ற
வசதியினைப் பயன்படுத்துகிறோம். பைலைத் தேர்ந்தெடுத்து, அதன் பெயர் மீது
ரைட் கிளிக் செய்து விரியும் கட்டத்தில் Properties என்ற பிரிவில் கிளிக்
செய்து அறிந்து கொள்ளலாம்.

சில கோப்புகளின் தன்மைகளை, கூறுகளைக் காணும்போதுதான், இதனை இப்படி
அமைத்திருக்கலாமே என்று எண்ணலாம். எடுத்துக் காட்டாக, இதன் அளவை இன்னும்
குறைத்திருக்கலாமே என்று சிந்திக்கலாம். அல்லது வேறு பார்மட்டில் சேவ்
செய்திருக்கலாமே என்று திட்டமிடலாம். அப்படியானால், கம்ப்யூட்டர் நம்மிடம்,
 இந்த பைலை இப்படிப்பட்ட கூறுகளுடன் சேவ் செய்யப் போகிறேன் என்று கேட்டால்
எவ்வளவு வசதியாகவும், நன்றாகவும் இருக்கும். இந்த வசதியைக் கம்ப்யூட்டர்
நமக்குத் தருகிறது. வேர்ட் தொகுப்பில் இதனை மேற்கொள்ளலாம். அந்த வழிகளைப்
பார்ப்போம்.

Tools கிளிக் செய்து Options தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். இதில் Save
அழுத்தவும். கிடைக்கும் விண்டோவில் Prompt for Document Properties என்ற
இடத்திற்கு நேராக டிக் அடையாளம் ஏற்படுத்தி ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
 இனி ஒவ்வொரு டாகுமெண்ட் சேவ் செய்திடுகையிலும் உருவாகப் போகும் பைல்
குறித்த பிராபர்ட்டீஸ் டீடெய்ல்ஸ் கிடைக்கும்.
பிராபர்ட்டீஸ் பிரிவில் யார் டாகுமெண்ட்டை உருவாக்கினார்கள் என்று உங்களைப்
 பற்றிய தகவல்கள் பதியப்படும். இது வேண்டாம் என்று நினைத்தால் அவை
பதியப்படாமல் இருக்கும் வகையில் செட் செய்து கொள்ளலாம்.

Tools கிளிக் செய்து Options தேர்ந்தெடுத்து பின் Security டேபை
அழுத்தவும். இதில் Remove personal information from the properties on
save என்பதனைத் தேர்ந்தெடுத்து அதில் டிக் செய்து ஓகே அழுத்தி வெளியேறவும்.
 இதே போல நீங்கள் ஒரு பைலைப் பார்த்த விஷயம் கம்ப்யூட்டரில் My Recent
Documents என்பதில் இருக்கும் அல்லவா? இங்கும் நீங்கள் பைலைப் பார்த்த
விஷயம் பதியப்படக் கூடாது என எண்ணினால் டாகுமெண்ட்டைத் திறந்து பின் Ctrl +
 O அழுத்தவும். கிடைக்கும் விண்டோவில் இடது பக்கம் கிடைக்கும் கட்டங்களில்
My Recent Documents அழுத்தவும். பின் கிடைக்கும் விண்டோவில் வலது பக்கம்
Tools எனத் தெரியும் இடத்தில் அழுத்தி கீழ் விரியும் விண்டோவில் Clear
Documents History என்பதில் டிக் ஏற்படுத்திப் பின் ஓகே கிளிக் செய்து
வெளியேறவும்.




நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.

நண்பன்
தலைமை நடத்துனர்


பதிவுகள்:-:  23008
சேர்ந்தது:-:  29/10/2010




 Re: தெரிந்து கொள்ளலாம் கணனி தொகுப்பு 1

 by நண்பன் on 2011-02-25, 02:48

இலவச எழுத்துக்கள் தரும் இணைய தளங்கள்


நீங்கள் கம்ப்யூட்டரில் பணிபுரியும் டிசைனர் என்றால் நிச்சயமாக உங்கள்
வேர்ட் ப்ராசசர், டி.டி.பி. சாப்ட்வேர் மற்றும் பிற தளங்கள் தரும் எழுத்து
வகைகள், உங்கள் கற்பனைத் திறனுக்கு ஈடு கொடுக்க முடியாது. ஆனால் இணையத்தில்
 இலவசமாக எழுத்து வகைகளைத் தரும் தளங்கள் நிறைய உள்ளன. ஒரு சில தளங்களில்
கட்டணம் செலுத்தியே சில எழுத்துவகைகளைப் பெற முடியும். பெரும்பாலான தளங்கள்
 விண்டோஸ் சிஸ்டத்துடன் மற்ற மேக் மற்றும் லினக்ஸ் தளங்களில் பயன்படுத்தும்
 எழுத்துவகைகளையும் தருகின்றன. இவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.

1.www.fawnt.com : இந்த தளம் 9348 எழுத்து வகைகளுக்கான கோப்புகளைக்
கொண்டுள்ளது. டிசைனர், டெவலப்பர்கள் மற்றும் இணையப் பக்கங்கள் அழகாக அமைய
வேண்டும் என விரும்புபவர்கள் இந்த தளம் சென்று எழுத்து வகைகளைப் பெறலாம்.

2.www.abstractfonts.com : இதில் 11,849 எழுத்து கோப்புகள் உள்ளன. நம்
தேவைக்கேற்ப எழுத்து வகைகளைத் தேடுவதற்கு நல்ல யூசர் இன்டர்பேஸ்
தரப்பட்டுள்ளது.

3. www.dafont.com : இதில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட எழுத்துவகைகள்
கிடைக்கின்றன. அனைத்தும் இலவசமே. எளிதாகத் தேடி அறிந்து எடுத்துக் கொள்ள
சிறப்பாக வழி காட்டும் மெனு உள்ளது.

5. www.free–fonts.Com : இது எழுத்துவகை கோப்புகளுக்கு ஒரு தேடல் சாதனம்
போலச் செயல்படுகிறது. இதன் தகவல் கிடங்கில் 55 ஆயிரம் எழுத்துவகைகளுக்கு
மேல் காட்டப்படுகிறது. ஆனால் பிரவுஸ் செய்து பெற முடியவில்லை. எழுத்து
வகையின் பெயரை நினைவில் வைத்துத் தேட வேண்டும்.

6.http://simplythebest.net/fonts/: ஆயிரக்கணக்கில் எழுத்துவகை கோப்புகளைக்
 கொண்டு, அவற்றைத் தரம் மற்றும் வகை பிரித்துக் காட்டுகிறது. ஒவ்வொரு
எழுத்துவகையும் இலவசமா இல்லையா என்று முதலிலேயே காட்டப்படுகிறது. மேலே
கூறப்பட்ட தளங்களிலிருந்து எழுத்து வகைக்கான கோப்புகளை இறக்கி, அவை
சுருக்கப்பட்ட ஸிப் பைல்களாக இருந்தால், அவற்றை விரித்துப் பின் பாண்ட்ஸ்
போல்டரில் இன்ஸ்டால் செய்திட வேண்டும்.

7. http://www.beautifulfonts.com/




நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.

நண்பன்
தலைமை நடத்துனர்


பதிவுகள்:-:  23008
சேர்ந்தது:-:  29/10/2010




 Re: தெரிந்து கொள்ளலாம் கணனி தொகுப்பு 1

 by நண்பன் on 2011-02-25, 02:50

பெட்டர் எக்ஸ்புளோரர் (Better Explorer)


விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயக்கத்தில் பல புதிய மாறுதல்களை
மைக்ரோசாப்ட் தந்தாலும், அதன் விண்டோஸ் எக்ஸ்புளோரர் குறிப்பிடத்தக்க
மாற்றங்கள் இல்லாமல் அப்படியே தான் இயங்குகிறது.

விஸ்டாவிலிருந்து பார்க்கையில் ஒரு சில குறிப்பிட்டுச் சொல்ல முடியாத
மாற்றங்களை மட்டும் இங்கு காணலாம். இந்த வகையில் விண்டோஸ் எக்ஸ்புளோரரில்
பல கூடுதல் வசதிகளைத் தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது பெட்டர்
எக்ஸ்புளோரர் (Better Explorer) என்னும் சாப்ட்வேர்.

இது தனியாகவே தன்னுடைய இன்டர்பேஸ் மூலம் பல வசதிகளைத் தருகிறது. முதலாவதாக
இப்போது இன்டர்நெட் பிரவுசர்களில் காணப்படும் டேப்களை இங்கு இணைத்துப்
பார்க்கலாம். டேப்கள் இல்லாமல் வழக்கம் போல கிடைக்கும் தோற்றத்தில்
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் செயல்பாட்டை விரும்பினால், அதனையும் பெற்றுக்
கொள்ளலாம்.

இந்த சாப்ட்வேர் தொகுப்பைத் தயாரிப்பவர்கள் இன்னும் பல மாற்றங்களை விண்டோஸ்
 எக்ஸ்புளோரரில் கொண்டு வர முயற்சிப்பதாக, இவர்களின் தளத்தில்
அறிவித்துள்ளனர். பெட்டர் எக்ஸ்புளோரர் புரோ கிராமிற்கும், கூடுதல்
தகவல்களுக்கும் http://bexplorer.codeplex.com/ என்ற முகவரியில் உள்ள
தளத்தினை அணுகவும்.

Artikel Terkait

0 comments

Post a Comment

Cancel Reply