மற்றவர்களின் வலைப்பதிவில்(Blogs) பின்னூட்டம்(Comments) இடுவதின் 5 பயன்கள்.
நாம் குறைந்தது ஒரு நாளைக்கு 5 -6 வலைபதிவுகளுக்கு சென்று நம் மனதிற்கு பிடித்த விசயத்தை படிப்போம். அதுவும் கண்டிப்பாக தொழில்நுட்பம் அல்லது சினிமா பற்றிய வலைபதிவுகளுக்கு நிச்சயம் நமது கணிணியில் இடம் கொடுப்போம். அப்போது நாம் விசயத்தை படித்துவிட்டு அவர்களுக்கு பின்னூட்டம் இடாமலேயே வந்து விடுவோம். நேரம் இன்மை காரணமாக அந்த பதிவில் இருந்து வேறு ஒரு பதிவிருக்கு தாவி விடுவோம். அப்படி செய்யாமல் நாம் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்கும் பின்னூட்டம் இடுவதால் நமக்கு கிடைக்கும் முக்கியமான 5 பயன்களை பற்றி பார்போம்.
01 . ஒவ்வொரு பதிவரின் எழுத்துக்கு அங்கீகாரம்: ஒவ்வொரு பதிவையும் எழுதும் முன்பு அந்த விசயத்திற்காக பதிவர்கள் கண்டிப்பாக மெனகெடுவார்கள். தங்களது வாசகர்களுக்காக நல்ல செய்தியை தரமுடனும், எளிமையாகவும் எடுத்து கூற ஆசை பட்டு தங்களது வலை பதிவில் செய்தியை பதிப்பார்கள். நீங்கள் பின்னூட்டம் இடுவதால் அவர்கள் தங்கள் பதிவுக்கு கிடைத்த சின்ன அங்கீகாரமாக நினைத்து இன்னும் நல்ல விசயங்களை நமக்கு கொடுப்பார்கள்.
02 .உங்கள் வலைப்பதிவின் Traffic 'ஐ அதிகரிக்க : நாம் மற்ற பதிவிர்களின் பதிவில் பின்னூட்டம் இடுவதன் மூலம் அந்த பதிவர்கள் தங்களது பதிவுக்கு பின்னூட்டம் இட்ட நபர் யார் என்ற ஆவலில் நமது பதிவுக்கு வந்து செய்திகளை வாசிப்பார். இது நமது பதிவுக்கு web Traffic 'ஐ அதிகரிக்க உதவும்.
03 . கருத்து மற்றும் நட்பு பறிமாற்றம்: ஒரே வகையான விஷயங்கள் நீங்கள் எழுதியதை போலேவே பலரும் எழுதி இருக்க கூடும். அந்த சமயத்தில் உங்களின் பின்னூட்டம் மூலமாக சிறந்த கருத்துகளை விவாதிக்க அது வித்திடுகிறது. அது மட்டும் அல்லாமல் முக்கியமாக நமது நட்பு வட்டம் இன்னும் பெரியதாக அமைய வாய்ப்பு ஏற்படுகிறது.
04 .உங்கள் அடுத்த பதிவிற்கான களம்: நமக்கு வரும் பின்னூட்டம் மூலமாக பலர் பல கேள்விகளை வினவி இருப்பார்கள். எனவே அதற்கு பதில் அளிக்கும் நோக்கில் உங்கள் அடுத்த பதிவிற்கு களம் அமைகிறது.
05 . உங்கள் பெயர் பிரபலம் அடையும்: நாம் பல வலை பக்கங்களிலும், வலைப்பதிவுகளிலும் பின்னூட்டம் இடுவதால் உங்கள் பெயர் அனைத்து இடங்களிலும் பரவும். கூகிள்'ல் உங்கள் பெயரை சொடுக்கினால் கண்டிப்பாக அது பல வலைப்பக்கங்களில் உங்களுக்கான முகவரியை தரும்.
Share | |
Sunday, March 7, 2010
IPL 'ல் கலக்கும் FAKE IPL PLAYER . .
இதோ இன்னும் ஒரு வாரத்தில் ஆரம்பிக்க போகிறது IPL (Indian Premier League) . சென்ற வருடம் தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்த வருடம் மீண்டும் இந்தியாவிற்குள் அடி எடுத்து வைத்து இருக்கிறது IPL . கண்டிப்பாக இந்த வருடம் மிகவும் பிரமாண்டமாகவும், செல்வ செழிபோடும் இருக்க போகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த முறை ஆட்டத்தில் யார் கலக்க போகிறார்களோ இல்லையோ, ஆட்டத்துக்கு வெளியே பதிவுலகத்தில் கலக்க மறுபடியும் வருவேன் ஏன் கூறி உள்ளார் "Fake IPL Player". இவரை பற்றி தெரியாதவர்களுக்கு இவரை பற்றிய சின்ன முகவுரை. தன்னை போலி IPL விளையாட்டு வீரர் என பிரகடன படுத்தும் இவர் Kolkata Knight Riders அணியை சேர்ந்த வீரர் என கூறினார். இவர் கடந்த 2009 IPL 'ல் இருந்து Kolkata Knight Riders அணியை சேர்ந்த வீரர் என்ற பார்வையில் தனது வலைபதிவில் பல்வேறு சம்பவங்களை தொடர் முழுவதும் எழுதினர். இவரது வலைப்பதிவு ஆரம்பித்த சில நாட்களிலேயே மிகவும் பிரபலமானது. இவரது செய்திகள் ஒரு புறம் சர்ச்சையை ஏற்படுத்தியே போதும் இவருக்கு பலர் விசிறி ஆனார்கள். உண்மையில் இவர் யார் ? நமது இந்திய நாட்டு வீரரா அல்லது வேறு நாட்டு வீரரா இல்லை வந்ததிகளை பரப்பும் நபரா என யாருக்கும் தெரியவில்லை. இவரது வலைப்பதிவின் சில அம்சங்கள் இங்கே :
150,000 visitors சராசரியாக 15 நிமிடங்கள் இவரது வலை பதிவில் உலாவுகின்றனர்.
போட்டிகள் நடக்கும் சமயத்தில் இவரது வலைபதிவு இந்திய அளவில் முதல் 10 இடங்களில் வருகிறது.
மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்.
இவர் மீண்டும் இம்முறை வருவாரா வரமாட்டாரா என ரசிகர்கள் எதிர்பார்த்த சமயத்தில் பில்லா அஜித் போல் "I'M Back" என அறிவித்துள்ளார். அது மட்டும் அல்லாமல் அவர் இந்த முறை தான் பல செய்திகளை ‘The Gamechangers’ என்ற தன் புத்தகத்தில் வெளியிட போவதாக அறிவித்துள்ளார். எது எப்படியோ IPL என்றாலே சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இருக்காது போலும்.
http://www.fakeiplplayer.com/
http://www.indibloggies.org/fip-interview?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed:+indibloggies+%28The+Indibloggies%29&utm_content=Google+Reader
Share | |
தரவிறகத்தை(Download) சுலபமாக்கும் 'Mipony' மென்பொருள்
பெரும்பாலும் இணையத்தில் உலா வரும் அனைத்து நபர்களும் தங்களக்கு பிடித்தமான விசயங்களை தங்களது கணிணிக்குள் தரவிறக்கம் செய்ய ஆசை படுவார்கள். பெரும்பாலும் அவர்கள் தரவிறக்கம் செய்யும் கோப்புகள் பல MB கணக்கிளும், ஒரே கோப்பு பல பாகங்களாக பிரித்து இணைய வழங்கியில் (Web Server) சேமித்து வைத்து இருப்பார்கள். அங்கே இருந்து நமது கோப்பை தரவிறக்க சில வினாடிகள் காத்திருக்க வேண்டும். அது மட்டும் அல்லாமல் ஒரு நாளைக்கு இவ்வளவு அளவுதான் நீங்கள் தரவிறக்கம் செய்ய முடியும் என்று விதிகள் பல இருக்கும். இவை அனைத்தையும் விட நாம் தரவிறக்கம் செய்ய ஆரம்பித்த உடன் நமது இணையத்தின் வேகம் குறைந்து நமக்கு சங்கடத்தை தரும். எனவே நாம் பெரும்பாலும் பெரிய அளவிலான கோப்புகளை Torrentz எனப்படும் மென்பொருள் மூலம் தரவிர்ரகம் செய்து கொள்வோம். இரவில் தரவிறகத்தை ஆரம்பித்து வைத்துவிட்டால் காலை நமது கோப்பு தரவிறக்கம் ஆகி இருக்கும். ஆனால் பெரும்பாலும் நமக்கு தேவையான கோப்புகள் torrentz 'இல் இருக்குமா என்பது சந்தேகம். அது மட்டும் இல்லாமல் நமது கோப்பு நல்ல நிலையில் இருக்குமா என்பது மிக பெரிய கேள்வி குறி தான். எனவே இந்த பிரச்சனையை சுலபமாக்கும் மென்பொருள் தான் Mipony . இந்த மென்பொருளை இந்த லிங்கில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். இந்த மென்பொருள் உலகில் உள்ள பிரபலமான பல இணைய வழங்கியில் (Web Server) இருந்து கோப்புகளை தரவிறக்கம் செய்யும் வசதி கொண்டது. இந்த மென்பொருளை உங்கள் கணிணியில் நிறுவியயுடன் உங்களக்கு தேவையான கோப்பு எந்தவொரு இணைய வழங்கியில் (Web Server), எவ்வளவு பாகங்களாக இருந்தாலும் அனைத்தையும் ஒரே நேரத்தில் தரவிறக்க உதுவுகிறது. அது மட்டும் இல்லாமல் அந்த கோப்புகள் இணைய வழங்கியில் (Web Server ) நல்ல நிலையில் உள்ளதா என்று நாம் தரவிறக்கம் செய்யும் முன்பே நமக்கு சொல்லி விடுகிறது. மேலும் சிறப்பாக இந்த மென்பொருளின் உள்ளேயே ப்ரௌசெர் (Browser) இருக்கிறது.
அது மட்டும் இல்லாமல் நாம் ஒவ்வொரு முறையும் ஏதானும் லிங்கை தரவிறக்கம் செய்ய முயற்சிக்கும் போது தானகவே இந்த மென்பொருள் அந்த லிங்கை தன்னுடன் இணைத்து கொள்கிறது. இந்த மென்பொருள் கண்டிப்பாக Torrentz'க்கு மாற்றாக அமையும் வசதி கொண்டது. இந்த மென்பொருளை கடந்த 3 மாதங்களாக உபயோகித்து வருகிறேன். மிகவும் உபயோகமானதாக இருக்கிறது. இந்த மென்பொருள் பற்றி ஏதனும் சந்தேகம் இருந்தால் பின்னூட்டம் இடுங்கள்.
Share | |
Thursday, March 4, 2010
உங்கள் புகைப்படம் கலைப்படமாக மாற...

நீங்கள் சில நாட்கள் முன்பு உங்கள் நண்பர்களடோ அல்லது உங்கள் குடும்பதோடோ ஏதேனும் சுற்றுலா சென்று வந்த புகைப்படங்கள் அல்லது உங்களது கல்லூரி, பள்ளி நாட்கள் புகை படங்களோ என நீங்கள் பொக்கிசமாக பாதுகாக்கும் படங்களை ஒரு ஆல்பம் போல் சேர்த்து வைத்து காலம் கழித்து பார்க்கும் போது நம் மனதில் ஏற்படும் உணர்வுகளுக்கு அளவே இருக்காது. அதை எப்போது பார்த்தாலும் நம் மனதிற்கு இனிய சுகத்தை தரும். ஆனால் நாம் புகைப்படங்களை எடுத்து கொண்டு ஏதேனும் புகைப்பட கடைக்கு சென்றால் நமது கற்பனைக்கு ஏற்றவாறு ஆல்பத்தை அமைக்க இயலாது. அப்படி அமைத்தாலும் அதுக்கு நாம் நிறைய செலவு செய்ய வேண்டி வரும். இந்த நவீன உலகத்தில் இதை மனதில் கொண்டு ஒரு மென்பொருள் நம் புகைப்படங்களை அழகிய ஆல்பமாக "WonderShare Photo collage" என்ற மென்ப்பொருள் மாற்றி தர உதவுகிறது. "Wondershare Photo Collage" என்ற இந்த லிங்கை உபயோகித்து மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். அதை உங்கள் கணிணியில் நிறுவிக்கொள்ளுங்கள். பின் உங்களுக்கு பிடித்த ஆல்பத்தின் வடிவத்தை உபயோகித்து உங்கள் புகைப்படங்களை உங்கள் மனதிருக்கு பிடித்த வடிவத்தில் இணைத்து கொள்ளுங்கள். பின்பு என்ன அதை உங்கள் சமூக வலை பின்னல்களில் உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து ஒரு கலக்கு கலக்குங்கள்!
இங்கு சில படங்களை "WonderShare Photo collage" மென்ப்போருளில் மாற்றிய விதத்தை அளித்துளேன். கண்டிப்பாக இந்த தளம் புகைப்பட பிரியர்களுக்கு அளவில்லா மகிழ்ச்சி தரும்.
Share | |
Tuesday, February 16, 2010
என் செல்லமான டிவிட்டர் நாய்குட்டி!
எப்பொதுமே ஒரு பிரபலமான வாசகத்தை நாம் நினைவில் வைத்திருப்போம். எனக்கு இந்த விசயத்தை படித்த பின்பு ஞாபகத்துக்கு வந்த வாசகம் "பிரேக் தி ரூல்ஸ்(Break the Rules)". ஆம் இதுவரை மனிதர்கள் மட்டும் தான் டிவிட்டரில் கலக்கி கொண்டு இருந்தார்கள். "ஏன்? எங்களால் டிவிட்ஸ் அனுப்ப முடியாதா?" என இனிமேல் உங்கள் செல்ல பிராணியான நாய்களும் கேட்க போகிறது. ஆம், இனிமேல் உங்கள் செல்ல பிராணிகளும் டிவிட்டரில் கலக்கலாம் என சொல்லி நாய்களின் மடியில் பால் வார்த்து உள்ளார்கள் "பப்பி டிவிட்ஸ்(Puppy Tweets)" என்ற நிறுவனம். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் முதலில் உங்கள் செல்ல நாயுக்கு ஒரு டிவிட்டர் கணக்கை தொடங்குங்கள். பின்பு பப்பி டிவிட்டர் காலரை வாங்கி உங்கள் நாயின் கழுத்தில் மாட்டி விடுங்கள். இப்பொது தான், இந்த இடத்தில தொழில் நுட்பத்தை உபயோகிகிரர்கள். உங்கள் நாயின் கழுத்தில் உள்ள காலரில் இருக்கும் சென்சார் உங்கள் நாயின் மனநிலைக்கு ஏற்ப உங்கள் கணிணியுடன் இணைக்க பட்டிருக்கும் Wi-Fi' க்கு தகவல் தரும். அதில் இருக்கும் தகவல்கள் ஏற்கனேவே சேமித்து வைக்க பட்டிருக்கும் டிவிட்சை மென்பொருளின் உதவியுடன் உங்கள் நாயின் டிவிட்டர் கணக்கில் இருந்து டிவிட்ஸ் அனுப்ப படும். இனிமேல் தினமும் உங்கள் நாயின் மிது ஒரு கண் வைத்து கொள்ளுங்கள். உங்களைவிட உங்கள் நாய் அதிக டிவிட்டர் ரசிகர்களை கவர்ந்து விட போகிறது.சில செல்ல நாய்களின் டிவிட்டர் கணக்குகள்:
http://twitter.com/Puppy_Tweet
http://twitter.com/Puppy_Tweet
Share | |
Monday, February 15, 2010
டிவிட்டரில் உங்களின் ரேங்க் என்ன?
சும்மா ஒரு முறை உங்களது டிவிட்டர் ரேங்க்'ஐ நகம் கடித்து கொண்டு பார்த்து விட்டு வாருங்கள்
0 comments
Post a Comment